ஒரே பாறையை செதுக்கி கோவிலாக்கும் அற்புதக் கலையின் உச்சம் - காஞ்சி கைலாசநாதர் ஆலயம்.!

ஒரே பாறையை செதுக்கி கோவிலாக்கும் அற்புதக் கலையின் உச்சம் - காஞ்சி கைலாசநாதர் ஆலயம்.!

Update: 2020-07-16 02:32 GMT

காஞ்சி கைலாசநாதர் ஆலயம் காஞ்சிபுரத்தின் தொன்மையான கோவிலாகும். இந்த திருத்தலமே தேவார வைப்புத்தலமாகவும் திகழ்கிறது.

ஈசனை முக்கிய மூலவராக கொண்ட இத்திருத்தலம் வரலாற்று ரீதியாக அதீத முக்கியத்துவம் பெற்றது. இந்த கோவில் கி.பி 685-705 காலகட்டத்தில் பல்லவ காலத்தில் இராஜசிம்மன் என்ற அரசர் கட்டினார். இதனாலேயே இந்த இடம் கல்வெட்டுகளில் "இராமசிம்மேச்வரம் " என்று அழைக்கப்படுகிறது. இந்த நவீன யுகத்தில் குறைவான கவனத்தை பெற்றிருக்கும் இதன் சுற்றுபுற வடிவமைப்பில் ஏராளமான குடவரை சிற்பங்கள் செதுக்கப்பட்டிட்ருக்கின்றன.

இந்த கோவில் வளாகத்தினுள் 58 சிறு கோவில்கள் உள்ளன. இவையனைத்தும் பல்வேறு வடிவில் சிவனை துதிப்பதாகவே அமைந்துள்ளது. வேகாவதி நதிக்கரையோரம்

இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. தமிழ் முக்கிய அடையாளமாக இக்கோவில் திகழ்வது இதன் தனிச்சிறப்பு. ஒரு பாறையினை செதுக்கி கோவிலாக உருவாக்கும் இந்த கலையில் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுவது மாமல்லபுரம் கடற்கரை கோவில்.

இந்த கோவில் மூன்று பகுதிகளாக பிரிக்கபட்டுள்ளது. ஒன்று, இக்கோவிலின் மூலவர் அமைந்துள்ள பகுதி. இரண்டாவது பகுதி, மூலவரை சுற்றி எழுப்பப்பட்ட உள்பகுதி, மூன்றாவது வெளிப்புற பகுதி. இந்து மதத்தின் ஏழு புனித நகரங்களுள் ஒன்றாக கருதப்படும் இந்த காஞ்சிபுரத்தில் இத்திருத்தலம் சிவ காஞ்சி எனும் மரபை பின்பற்றுகிறது. மேலும் கருவறையை சுற்றியுள்ள குறுகிய பகுதியானது புனர் ஜனனி என்றழைக்கப்படுகிறது. இந்த இடத்தை வலம்

இக்கோவிலின் மற்றொரு தனித்துவமாக கருதப்படுவது இக்கோவிலின் விமானம். இது அதிட்டானம் துவங்கி உச்சி வரை கல்லாலேயே அமைக்கப்ட்டிருக்கிறது. மேலும் இந்த விமானம் தரையிரங்கியிருக்க கூடுமோ என்கிற ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் படி அதிசயக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.

இந்த கோவிலை சுற்றி பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பல்லவ காலத்து ஓவியங்களை நாம் காண முடியும். இக்கோவிலில் மஹா சிவராத்திரி விழா பெரும் விமர்சையுடன் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.

காஞ்சிபுரத்தை சாளுக்கிய மன்னனான இரண்டாம் விக்ரமாதித்தியன் கைப்பற்றிய போது, பல்லவர்களின் தனிப்பெருமையாய் திகழ்ந்த கட்டிட கலைஞர்களை தங்களுடன் கர்நாடாக மாநிலம், பட்டக்கல் என்ற பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு சாளுக்கிய ராஜ்ஜியத்தின் அரசி வணங்கி வந்த விருப்பாட்ஷா என்ற தெய்வத்திற்கு கோவில் கட்ட பணித்தனர். பல்லவர்கள், சாளுக்கியர்கள் இடையே மூண்ட பகைக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் இந்த இரு கோவில்களும் ஓர் அடையாளமாய் திகழ்கின்றன.

சென்னையிலிருந்து 45 மைல் தூரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இந்நகரானது திருத்தலங்களுக்கு பெரும் பெயர் பெற்றது காரணம் இந்நகரை சுற்றி ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மன், குமரகோட்டம் மற்றும் வரதராஜ பெருமாள் போன்ற புகழ் பெற்ற பல தலங்கள் இருந்தாலும் காஞ்சி கைலாசநாதர் ஆலயம் சென்று தரிசிப்பது கைலாசத்தையே கண்ட அனுபவத்தை நல்கும் என்பதால் இத்திருத்தலம் சுற்றுலா பயணிகளையும், ஆன்மீக அன்பர்களையும் அதிகம் ஈர்க்கும் இடமாக உள்ளது.

Similar News