வழிபடுவோரின் சனி தோஷம் நீக்கும் அதிசயத்தலம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர்.!

வழிபடுவோரின் சனி தோஷம் நீக்கும் அதிசயத்தலம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர்.!

Update: 2020-04-18 02:14 GMT

நவ கோள்களில் சனீஸ்வரன் கர்ம காரகனாக கருதப்படுகிறார் . நம் முன்வினை பயன்களை அனுபவிக்க செய்பவர் சனி பகவான் . நல்ல பலன்களோ தீய பலன்களோ தவறாமல் தந்துவிடுவார் . தமிழகத்தில் திருநள்ளாற்றிற்கு அடுத்த சிறப்பு வாய்ந்த சனி பகவான் ஸ்தலம் குச்சனூர் . இந்த சனி பகவான் இங்கு சுயம்பு வடிவில் மூலவராக காட்சி தருகிறார் . இந்த கோயில் மூலவர் வளர்வதாக கூறுகிறார்கள். லிங்க வடிவில் உள்ள இந்த சனீஸ்வரன் வளர்ந்து கொண்டே இருப்பதால் அதனை தடுக்க மஞ்சள் காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது .

முற்காலத்தில் சந்திரவதனன் எனும் மன்னன் தன் தந்தைக்கு ஏற்பட்ட சனி தோஷத்திற்காக இந்த ஸ்தலத்தில் சனீஸ்வரனை வழிபட்டு தன் தந்தையின் தோஷத்தை தான் வாங்கிக் கொண்டான். அதனால் சனி பகவான் இந்த ஸ்தலத்தில் யார் வந்து வழிபட்டாலும் சனி தோஷம் நீங்கும் என வரமளித்தார் . அதனால் இங்கு வழிபட்டால் சனி செவ்வாய் தோஷங்கள் நீங்கி வாழ்வில் சுபிட்சம் வரும் . இங்கு சுரபி நதி ஓடுகிறது. சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு நீராடி எள் விளக்கேற்றி காக்கைக் கு உணவளித்து அன்னதானம் செய்கிறார்கள் .

ஆண்டுதோறும் ஆடி மாதம் 5 சனிக்கிழமைக களில் இங்கு திருவிழா நடக்கிறது . மேலும் சனி பெயர்ச்சி விழா இங்கு வெகு விமர்சையாக கொண்டாடபடுகிறது . தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் . பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் இவருக்குள் அடக்கம், மூன்று கண்கள் சக்தி ஆயுதம் வில் ஆயுதம் நான்கு கரங்கள் மற்றும் இரண்டு பாதங்கள் கொண்டுள்ளார் .

இந்த கோயில் தேனி மாவட்டத்தில் குச்சனூரில் உள்ளது. தேனியில் இருந்து உப்புக்கோட்டை விலக்கு வழியாக வந்தால் 20 கி.மி தூரத்திற்கு பஸ் வசதி உண்டு . தேனியில் இருந்து கம்பம் குமுளி செல்லும் பஸ்ஸில் ஏறி சின்னமனூர் நகரத்தில் இறங்கி 7 கி.மி. தொலைவில் உள்ள குச்சணரை அடையலாம் . பஸ் ஆட்டோ வசதிகள் உண்டு . காலை 7.30 மணிக்கு நடை திறந்து பிற்பகல் 1 மணிக்கு அடைக்கப்படும் . பிறகு மாலை ஆறு மணிக்கு திறந்து 8 மணிக்கு அடைக்க படும் திருவிழா காலங்களில் அதிகாலை 5 மணிக்கே நடை திறந்து விடும்

Similar News