எமனின் பாசக்கயிறு சிவனின் மீது விழுந்த அதிசயத் திருத்தலம்..

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், மயிலாடுதுறை

Update: 2020-04-08 01:55 GMT

நவகிரஹங்களுக்கான சந்திதிநவகிரஹங்கள் பலமிழக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஷ்வரர் கோயில் . நவகிரஹங்களுக்கான சக்தி எதுவும் இல்லாமல் இருக்கும் கோயில் திருக்கடையூர் அமிர்தகடேஷ்வரர் கோயில் ஆகும் . புராணத்தில் திருப்பாற்கடலை கடைந்து தேவாசுரர்களுக்கு அமிர்தத்தை பகிர்ந்தளித்த போது முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட தவறிவிட்டார்கள் அதனால் கோபம் கொண்ட விநாயகர் அமிர்த கலசத்தை இந்த இடத்தில் ஒளித்து வைத்து விட்டார் அதுவே பின்னர் சிவலிங்கமாக மாறிவிட்டது அதனால் இந்த இறைவனுக்கு அமிர்த கடேஸ்வரர் என்று பெயர். இத்தலத்தில் உள்ள விநாயகர் கள்ள விநாயகர் என்ற பெயரோடு அருள் பாலிக்கிறார் .

இந்த தலம் ஆயுள் விருத்திக்கு ஏற்ற தலமாக கருதப்படுகிறது . ஆயுஷ் ஹோமம் மிருத்துந் ஜெய ஹோமம் இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது . இந்த தலத்தில் பூர்ணாபிஷேகம் (100) கனகாபிஷேகம் (90) மணி விழா போன்றவை செய்து கொண்டால் ஆயுள் நீட்டிக்கும் என்பது ஐதிகம். இது மார்கண்டேயர் எமனி டம் இருந்து தப்பிய தலமாகும் அதனால் இங்கு நடக்கும் சுப காரியங்களுக்கு நாள் திட்சத்தி திதி போன்றவைகள் பார்க படாமல் ஜென்ம நட்சத்திரம் மட்டும் பார்கபடுகிறது. எமனின் பாசக் கயிறு சிவலிங்கத்தின் மீது விழுந்த தடம் பாலாபிஷேகம் செய்யும் போது தெரிகிறது

சித்தர்கள் பலர் இந்த தலத்தில் வழிபட்டிருக்கிறார்கள் அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் . கிரகங்களின் தாக்கத்தை தடுத்து மார்கண்டேயரை இறைவன் காப்பாற்றிய தலம் என்பதால் இங்கு கோயில் சன்னிதிக்குள் கிரஹங்களுக்கு பலம் இல்லை எந்த கிரஹ தோஷமும் கோயில் சன்னிதிக்குள் வந்தால் பலமிழந்து விடும். இங்குள்ள கால சம்ஹாரம் மூர்த்திக்கு பூஜை செய்தாலே கிரஹ சாந்தி செய்ததற்கு சமம் .

இந்த தலமே அபிராமபட்டர் பிறந்த தலமாகும் . இந்த தலத்தில் இருக்கும் அபிராமியே பட்டரின் பாடலை கேட்டு தன் காதணியை நிலவாக மாற்றிய அதிசயத்தை நிகழ்த்தியவள் அபிராமி . இந்த நிகழ்வு நடைபெற்ற தை அமாவாசை நாளில் விமர்சையாக பூஜை நடைபெறுகிறது ஆயிரகணக்கில் மக்கள் குவிகிறார்கள் . இந்த வைபவத்தில் அபிராமியின் தோடு நிலவாக காட்சியளித்த 79 வது பாடல் பாடும் போது வெளிப்பிரகாரத்தில் பிரகாசமான விளக்குகளை , எரிய விடுகிறார்கள் .

ஆடிப்பூரம் புரட்டாசி நவ ராத்திரி பெளர்ணமி பங்குணி உத்திரம் விஷேச நாட்களாகும் . மார்கண்டேயருக்கும் அபிராமி பட்டருக்கும் கிரஹங்களை பலமிழக்க செய்து இறைவன் அற்புதத்தை செய்ததால் இங்கு நவகிரக சந்திதி இல்லை. இந்த தலம் கிரஹங்களின் மோசமான விளைவு களையும் தடுக்கும் . மயிலாடுதுறையிஎருந்து 18 கி.மி. தொலைவில் உள்ள திருக்கடையூரில் இத்தலம் உள்ளது 

Similar News