குடியரசுத்தலைவர் ஆட்சி துரதிஷ்டவசமானது : விரைவில் நல்ல முடிவு பிறக்கும்! தேவேந்திர பட்நாவிஸ் நம்பிக்கை

குடியரசுத்தலைவர் ஆட்சி துரதிஷ்டவசமானது : விரைவில் நல்ல முடிவு பிறக்கும்! தேவேந்திர பட்நாவிஸ் நம்பிக்கை

Update: 2019-11-13 05:10 GMT


மகாராஷ்ட்ர மாநிலம் மழை, வெள்ளம் போன்ற இயற்கை சேதங்களால் மிகவும் அவஸ்தையான சூழலில் உள்ளது, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களிலும், இதர தொழில்களிலும் இதனால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது, இந்த மோசமான சூழ்நிலையில் பாஜக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து நல்ல முடிவெடுத்திருந்தாலும் கடந்த 20 நாட்களாக இங்கு ஆட்சி அமைக்க முடியாத போக்கு நிலவியது.


இந்த சூழ்நிலையில் குடியரசுத்தலைவர் ஆட்சி இங்கு துரதிஷ்டவசமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் இந்த சூழ்நிலையை இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த நிலையில் மாநிலத்திற்கு ஒரு 'நிலையான' அரசாங்கம் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது என்றும் மற்ற கட்சிகள் நிலைமையை தீவிரமாக எடுத்துக் கொண்டு ஸ்திரமான ஆட்சி ஏற்பட ஒத்துழைப்பார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக பாஜக முன்னாள் முதல்வரும், மாநில பாஜக தலைவருமான தேவேந்திர பட்நாவிஸ் ஒரு செய்தி குறிப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.


அவர் மேலும் கூறுகையில் “


இன்று, மாநிலத்தின் முன்பாக பல கேள்விகள் உள்ளன. மழை பாதிப்பால் சிக்கலுக்கு உள்ளான மக்கள் , மோசமான அளவில் முதலீடுகள் பாதிப்பு, அரசாங்கத்தின் அன்றாட செயல்பாடுகள் பாதிப்பு, இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு இந்த நிலைமையை அனைத்து தரப்பினரும் தீவிரமாக எடுத்துக்கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன், விரைவில் மாநிலத்திற்கு நிலையான அரசாங்கம் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது என்று கூறினார்..


Similar News