இந்தியாவின் பாதுகாப்பு பலப்படுகிறது : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிசாட்- 7ஏ

இந்தியாவின் பாதுகாப்பு பலப்படுகிறது : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிசாட்- 7ஏ

Update: 2018-12-19 17:25 GMT

இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து உள்ளது. இந்த செயற்கைகோளுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் இன்று மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான ‘கவுண்ட்டவுன்’ நேற்று தொடங்கியது. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்11 ராக்கெட்டின் முதல்நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அதிவேக தகவல் தொடர்பு சேவை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் எடை 2,250 கி.கி ஆகும். இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட 35வது இந்திய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-7ஏ என்பது குறிப்பிடத்தக்கது. இது இஸ்ரோவின் ஸ்டாண்டர்டு I-2K பஸ் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் ஆகும். இது இந்திய துணைக் கண்டத்தில் இருப்பவர்களுக்கு Ku பேண்ட் மூலம் தகவல் தொடர்பு வசதியை அளிக்கிறது. ஜி.எஸ்.எல்.வியின் 13வது ராக்கெட் மூலம் ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.



10 முக்கியத் தகவகள்:
1. 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்-7ஏ, ஏவுகணை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்தது.
2. இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ‘இந்த புதிய ஏவுகணையின் மூலம், விமானங்கள் மட்டுமின்றி சிறிய உபகரணங்கள் கூட ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
3. 'இந்திய விமானப் படையை மேலும் நவீனமாக்க இந்த ஜிசாட்-7ஏ ஏவுகணை மிகவும் உறுதுணையாக இருக்கும்' என்று விமானப் படை வட்டாரங்கள் கூறுகின்றன.
4. இந்திய கப்பல் படைக்கு உதவும் வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜிசாட்-7 என்கின்ற ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம், தகவல் தொடர்புக்கு வெளிநாட்டு செயற்கைக்கோள்களை நம்பி இருப்பது தவிர்க்கப்பட்டது.
5. இந்திய விமானப் படை, இதுவரை வெளிநாட்டைச் சேர்ந்த செயற்கைக் கோள்கள் மூலமே, அதி நவீன தகவல் தொடர்பு விவகாரங்களைச் செய்து வந்தன. ஆனால், இனி அப்படி இருக்காது எனப்படுகிறது.
6. சமீபத்தில் இந்திய ராணுவ அமைச்சகம், ‘பாதுகாப்பு விண்வெளி ஏஜென்சி'-ஐ உருவாக்க ஒப்புதல் அளித்தது. இந்த ஏஜென்சியின் மூலம் விமானப் படையிடம் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி, நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த முடியும்.
7. ஜிசாட்-7, ஜிசாட்-6 ஆகிய ஏவுகணைகளுடன் ஜிசாட்-7ஏ ஏவுகணையும் பாதுகாப்புப் படையை நவீனமாக்க உதவப் போகின்றன.
8. இதற்கு முன்னர் நாவிக் என்கின்ற செயற்கைக்கோள், நாட்டிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறித்த விவரங்களை தந்து கொண்டிருந்தது.
9. இன்று செலுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்  50 மீட்டர் உயரம் கொண்டது. இது 17 மாடி கட்டடத்துக்குச் சமம். அதன் மொத்த எடை 440 கிலோ ஆகும்.
10. இந்த ஆண்டு இஸ்ரோ அமைப்பு மேற்கொள்ளும் 17வது மிஷன் இதுவாகும்.



Inputs from Isro, NDTV

Similar News