கிழிந்த ஷூவோடு ஓடினாரா கோமதி..? தமிழச்சிடா..புறக்கணிக்கிறாண்டா.. என்ற போலி போராளிகளுக்கு பதிலடி - உண்மையில் நடந்தது என்ன தெரியுமா..?

கிழிந்த ஷூவோடு ஓடினாரா கோமதி..? தமிழச்சிடா..புறக்கணிக்கிறாண்டா.. என்ற போலி போராளிகளுக்கு பதிலடி - உண்மையில் நடந்தது என்ன தெரியுமா..?

Update: 2019-04-27 10:15 GMT

தமிழக வீராங்கனை கோமதி ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இதற்கு அவருக்கு தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும்,இந்திய அரசியல்வாதிகளும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் காலில் அணிந்து ஓடிய ஷூ குறித்து ஒரு பொய்யான தகவல் இணையத்தில் பரவி வருகிறது.





அதில், " நல்ல ஷூ கூட போட முடியாம, வலது காலுக்கும் இடது காலுக்கும் வெவ்வேறு கலரில் என பிய்ந்துபோன ஷூ வை போட்டு கொண்டு ஓடி ஜெயித்து இருக்கிறார் கோமதி. தன்னுடைய ஏழ்மை நிலை காரணமாக ஓட ஒரு ஷூ கூட இல்லாமல் பிஞ்சு போன ஷூவை அணிந்து கொண்டு ஓடியே ஜெயித்துள்ளார் என்றும்,


மேலும், " நாட்டில் ரோட்டில் சுற்றி திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செருப்பை போல் யாரோ வீசி எறிந்த மாற்று ஷூக்களை மாட்டிட்டு போயி ஜெயிச்சிருக்கு அந்த பொண்ணு." என்றும் தங்கம் வென்ற வீராங்கனையை அவமதிக்கும் விதத்தில் ஒரு செய்தியை பரபரப்பி வருகின்றனர். அதன் உண்மை நிலை அறியாமலே பலரும் அதனை பரப்பி வருகின்றனர்.


சில ஒட்டபந்தய வீரர்கள் ஓடுவதற்கு வசதியாகவும் காயம் ஏற்படாமல் இருபதற்காகவும் வெவ்வெறு வகை ஷீக்களை அணிந்து ஓடுவது வழக்கம். அதுபோலதான் கோமதியும் ஓடிருக்கிறார். ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட வறுமை நிலையை தான் எல்லோரும் பேசிவருகின்றனர்.


அவர் அந்த நிலையினை கடந்து விளையாட்டு துறை ஒதுக்கீட்டில் அவர் வருமானவரித்துறையில் பணிபுரிந்து வருகிறார். தற்பொழுது ஷூ கூட வாங்க முடியாத நிலையில் அவர் இருக்கிறார் என்பது முற்றிலும் பொய்யானது. ஒருதகவலின் உண்மை நிலை என்ன என்று ஆராயாமல் கூட வதந்தியை பரப்பி வரும் மக்களின் மனநிலையை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஏற்கனவே கோமதியின் ஜாதியை மையப்படுத்தி ஒரு கும்பல் போலி செய்திகளை பரப்பி அரசியல் ஆதாயம் தேடிக்கொண்ட நிலையில், மீண்டும் இப்படியொரு இழிவான செயலை செய்து வருகின்றனர்.


ஜாதி வெறி பிடித்து இணையத்தில் அலையும் கேடுகெட்ட தி.மு.க உடன்பிறப்புகள்! தங்க மங்கை கோமதி விஷயத்தில் சில்லறை தேற்ற நினைத்து செருப்படி வாங்கிய தரமான சம்பவம்! #Gomathi


Similar News