ஹிந்து மத நம்பிக்கைகளை தடை செய்யும் பள்ளி கல்வித்துறை : பொங்கி எழுந்த பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா!

ஹிந்து மத நம்பிக்கைகளை தடை செய்யும் பள்ளி கல்வித்துறை : பொங்கி எழுந்த பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா!

Update: 2019-08-14 10:05 GMT

பள்ளி மாணவர்கள் சாதிகளை குறிக்கும் வண்ணங்களில் கயிறு கட்டுவதை தடுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கைக்கு பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில் “தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் சாதிப்பிரிவுகளை குறிக்கும் வகையில் வண்ணக்கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவதால் பள்ளிகளில் பிரிவினைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்களின் இந்த பிரிவினை உணர்வை சாதியவாதிகளும், சில ஆசிரியர்களும் கூட ஊக்குவிப்பதாக தெரிய வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமைக் கல்வி அலுவலர் அவ்வாறு இருக்கும் பள்ளிகளை கண்டறிந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும். பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலும், “கையில் கயிறு கட்டுவது. நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமத சின்னங்களை தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.


உதாரணத்துக்கு கனடாவில் கியூபெக் மாகாணத்தில் எந்த வித மத அடையாளங்களும் பள்ளிகளில் இருக்க கூடாதென்று, புர்கா அணியவும் தடை விதிக்கப்பட்டது. அது போன்று அனைத்து மதங்களையும் சரி சமமாக பாவிக்க வேண்டும் என்பதே அவரது கருத்தாகும். இது வரை பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் இந்துமத நம்பிக்கையை குறி வைத்து மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.




https://twitter.com/HRajaBJP/status/1161568435970564096


Similar News