கொரோனா நோயாளிகளை கவனிக்க ரோபோக்கள்.. ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.!

கொரோனா நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதற்காக புதிய வடிவிலான ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

Update: 2021-06-10 07:24 GMT

கொரோனா நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதற்காக புதிய வடிவிலான ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு கூடவே இருந்து மருந்து மற்றும் உணவுகளை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செய்து வருகின்றனர். இதன் காரணமாக பல மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.




 


இதனை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகள் ரோபோக்களை வடிவமைத்து வருகின்றது. அந்த வகையில், கொரோனா நோயாளிகளை கவனித்துக் கொள்வதற்காக ஹாங்காங் விஞ்ஞானிகள் ரோபோவை கண்டுப்பிடித்துள்ளனர். அந்த ரோபோவுக்கு 'கிரேஸ்' என்று பெயர் சூட்டியுள்ளனர்.


 



செவிலியர் போன்று நீல நிறத்தில் உடை அணிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிய பிராந்திய அம்சங்கள் குறித்தும் புரோகிராம் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரோபோவுக்கு மார்புப் பகுதியில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கருவி மூலம் மனிதர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கலாம். மேலும் நோயாளிகளின் பிரச்னைகளை எளிதில் கண்டறிந்து செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

அதிலும் தனியாக உள்ள முதியவர்கள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களுக்கு உதவுகின்ற வகையில் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

Similar News