கோவையில் சமூக தொற்றாக மாறியதா கொரோனா ? எப்படி எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருவருக்கு கொரோனா உறுதியாகியது? பீதியில் மக்கள்.!

கோவையில் சமூக தொற்றாக மாறியதா கொரோனா ? எப்படி எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருவருக்கு கொரோனா உறுதியாகியது? பீதியில் மக்கள்.!

Update: 2020-04-15 11:03 GMT

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஆனைமலை, கிணத்துக்கடவு உட்பட பகுதிகளை சேர்ந்த 126 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார். இப்போது 125 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த 126 பேரில் 124 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனாவிற்கு சிகிச்சை கொடுத்தது, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட குடும்பத்தார் இது போன்ற காரணங்களால் தான் கொரோனா பரவி உள்ளது.

இதில் கிணத்துக்கடவு சேர்ந்த 5 வயது சிறுவன் மற்றும் பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்த 50 வயது பெண்மணி இந்த இருவரும் எந்த ஒரு தொடர்பில் இல்லை. ஆனால் கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று சமூக நோய்யாக பரவி உள்ளதா? இது மக்களிடம் பெரும் பயத்தையும் , சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது

மேலும் இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது. ஆனால் மக்களுக்கு இந்தத் தொற்றறை பற்றிய தீவிரத்தை தெரியாமல் பல இடங்களில் சுற்றி வருகிறார்கள். இதே மாதிரி சுற்றிக் கொண்டிருந்தால் இந்த நோயை கட்டுப்படுத்த முடியாது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் குறையாததால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடித்துள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன்இருக்க முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது, மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனைப்பற்றி மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி கூறியது: வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர் மற்றும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மற்றும் இவர்களின் குடும்பத்தினர் மட்டும் தான் இதுவரை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அந்த 50 வயது பெண்மணிக்கு எப்படி கொரோனா வைரஸ் பரவியது என கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் அந்த 5 வயது சிறுவனுக்கு மட்டும் தான் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் கொரோனா பரவியுள்ளது. இதனைப் பற்றிய தகவலை சிவனின் பெற்றோரிடம் கேட்கப்பட்டு வருகிறது. சிறுவனுடன் தொடர்பில் இருந்த 100 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/apr/14/two-victims-without-any-touching-corona-became-a-social-epidemic-in-kovai-3400623.html 

Similar News