இந்தியா டுடே நாளிதழின் குஜராத் பதிப்பு எதற்காக இழுத்து மூடப்பட்டது? சேகர் குப்தா தகவல்.!

இந்தியா டுடே நாளிதழின் குஜராத் பதிப்பு எதற்காக இழுத்து மூடப்பட்டது? சேகர் குப்தா தகவல்.!

Update: 2020-08-06 14:21 GMT

அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட பூமிபூஜை வெற்றிகரமாக நேற்று நடந்து முடிந்தது. அயோத்தி இயக்கத்தை குறித்தும் பாபர் மசூதி இடிப்பை குறித்தும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பலரின் காயங்களுக்கு அது உப்பு தேய்ப்பது போல் இருந்தது. பத்திரிகையாளர் சேகர் குப்தா, தி பிரிண்ட் என்ற இணையதளத்தை தற்போது நடத்தி வருகிறார். அவர் 1992ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு குறித்து ஹிந்துக்களை அவமானப்படுத்தியது போல் இந்தியா டுடே நாளிதழ் தலையங்கம் எழுதியது எந்த அளவுக்கு அவர்களுக்கு வீழ்ச்சியில் முடிவடைந்தது என்பது குறித்து ஒரு நிகழ்வைப் பதிவு செய்துள்ளார்.

ஒரு ட்வீட்டில் ஷீலா பட், இந்தியா டுடேவின் அப்போதைய மூத்த ஆசிரியர் கூறுகையில், 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பு குறித்து ஒரு தலையங்கத்தை எழுதியது. அது "ராஷ்ட்ரா நு கலான்க்" , அதாவது 'நாட்டின் அவமானம்' என்று சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிப்பை குறித்து எழுதி இருந்தனர். இடிப்பு அது ஒரு அவமான சின்னம் என்றும் கரும்புள்ளி என்றும் எழுதியிருந்தனர். 



அவர் மேலும் கூறுகையில் இந்தியா டுடேவின் குஜராத் பதிப்பு குஜராத் மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு இழுத்து மூடப்பட்டதாக தெரிவித்தார். சேகர் குப்தா (அப்போதைய இந்தியா டுடே ஆசிரியர்) இந்த டீவீட்டை கோட் செய்து, அப்போதைய இந்தியா டுடேவின் குஜராத் பதிப்பு அக்டோபர் 1992 இல் நிறுவப்பட்டதாகவும், 6 வாரத்திற்குள் 75 ஆயிரம் பதிப்புகள் உயர்ந்ததாகவும் அந்த காலத்தில் அது மிகவும் பெரியது என்றும் ஆனால் மேற்கண்ட தலைப்புடன் அவர்கள் தலையங்கம் எழுதியவுடன் அவர்கள் அலுவலகம் எதிர்ப்புகளை காட்டும் வண்ணம் குவியல் குவியலாக கடிதங்களை எதிர் கொண்டதாகவும் , அடுத்த சில வாரங்களுக்குள் 25 ஆயிரம் பதிப்புகளாக சர்க்குலேஷன் குறைந்து விட்டதாகவும் அதனால் அவர்களின் மார்க்கெட்டிங் தலைவர் அந்த சமயத்தில் எதிர் பார்த்தவாறே குஜராத் பதிப்பை இழுத்து மூடி விட்டதாகவும் தெரிவித்தார்.

நேற்று ஆகஸ்ட் 5 ஆம் தேதி, இந்துக்களின் 500 ஆண்டுகால கனவு நனவாகி, பிரதமர் நரேந்திர மோடி ராம் ஜென்ம பூமியில் ராமர் கோவிலுக்கு வெற்றிகரமாக அடிக்கல் நாட்டினார்.

Similar News