குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்..? பெற்றோர் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்!
குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்..? பெற்றோர் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்!
குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? என்பதை விட,
பெற்றோர் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்
சுதா குப்தா, இந்தியாவில் புகழ்பெற்ற கல்வியாளர். குழந்தை உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். பன்னிரண்டு ஆண்டுகள் மாணவர்களின் மனதை அறிவதிலும், பெற்றோருடன் கலந்துரையாடுவதிலும் பழுத்த அனுபவம் பெற்றவர். ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெற்றோரிடம் ஆய்வுகள் நடத்தி குழந்தை வளர்ப்பு குறித்த முறைகளை புத்தகமாக எழுதியுள்ளார்.
அதை மையப்படுத்தி ஆயிரத்திற்க்கும் அதிகமான கட்டுரைகளை முன்னனி நாளிதழ்களில் எழுதியுள்ளார். ஏராளமான தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருமிவர், ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். குழந்தை வளர்ப்பு முறைகளை "பாஸிடிவ் பேரண்டிங்" (Positive Parenting) என்ற தலைப்பில் சிறு சிறு வாசகமாக தொகுத்து இவர் எழுதியுள்ள புத்தகத்திலிருந்து சில வாசகங்கள் தற்சமயம் சமூக வலைதளங்களிலும், வாட்சப் குழுக்குளிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன....அவை இங்கே.....
(இதை போன்ற இன்னும் பல குழந்தை வளர்ப்பு குறிப்புகளை இவரின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்....அம்முகவரி : https://www.facebook.com/PositiveParentingbySudhaGupta/)
1. உங்கள் குழந்தைகளிடம் எப்படி ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என சொல்லாதீர்கள். மாறாக எதை செய்ய வேண்டும் என சொல்லுங்கள். அவர்கள் செய்யும் தனித்துவமான செயலின் மூலம் நீங்கள் ஆச்சர்யம் அடைவீர்கள்.
2. குழந்தையை துவள செய்யும் ஒவ்வொறு தருணத்திலிருந்தும் அவனை/அவளை பாதுகாத்து கொண்டேயிருக்காதீர்கள். அது அவன் வாழ்வின் நிதர்சனத்தை கையாள தகுதியற்றவனாக ஆக்கிவிடும்.