நான் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன் - இந்தியா கிரிக்கெட் வீரர்!!

நான் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன் - இந்தியா கிரிக்கெட் வீரர்!!

Update: 2019-10-15 07:31 GMT

நான் சிறந்த ஆல்-ரவுண்டர், பந்து வீச்சாளர் அல்லது பேட்டிங் என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அணிக்காக எனது முழு பங்களிப்பை அளிப்பேன் என்று ஜடேஜா கூறியுள்ளார்.


இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா. இவர் சிறந்த ஆல்-ரவுண்டர். ஆனால் இவரை முழுமையாக பந்து வீச்சில் மட்டும் பயன்படுத்துகின்றனர். பேட்டிங்கில் முன்வரிசையில் இறக்கப்படுவதில்லை.





புனே டெஸ்டில் 6-வது இடத்தில் களம் இறங்கினர் ஜடேஜா. சிறப்பாக விளையாடிய இவர் 91 ரன்கள் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் சேர்ந்து 225 ரன்கள் குவித்தனர்.
டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 12 அரைசதங்கள் அடித்துள்ளார் ஜடேஜா.


இந்நிலையில் நான் ஒரு சிறப்பான ஆல்-ரவுண்டர் என்று தெரிவித்துள்ளார். என்னால் எந்த ஒரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அது பேட்டிங் அல்லது பந்து வீச்சு என்பது ஒரு விஷயம் இல்லை.
ஆனால் நான் பேட்டிங் ஆல்-ரவுண்டர் அல்லது பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் என்று பார்க்கவில்லை.





எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என என்னால் உறுதியாக கூற முடியும் . 6-வது இடத்தில் களம் இறங்கினால் தான் நீண்ட நேரம் களத்தில் விளையாட முடியும். நான் பேட்டிங் செய்ய போகும் போதுல்லாம் நீண்ட நேரம் களத்தில் நிற்க எதிர்பார்ப்பேன். அதன்பின் எனது வழக்கமான ஷாட்டுகளை விளையாடுவேன். இது எனக்கு அதிக அளவில் உதவியாக இருக்கிறது’’ என்றார்.


Similar News