ஸ்ரீநகரில் சவாலான நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட 2 ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகள்: காஷ்மீர் மக்கள் மனமுவந்து பாராட்டு !!
ஸ்ரீநகரில் சவாலான நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட 2 ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகள்: காஷ்மீர் மக்கள் மனமுவந்து பாராட்டு !!;
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 2 ஐஏஎஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இரண்டு பெண் அதிகாரிகளுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் தகவல்தொடர்பு இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரியான சயித் செஹ்ரிஸ் அஸ்கர் என்பவர் நியமிக்கப்பட்டார். மருத்துவராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஸ்ரீநகரை சேர்ந்த மக்கள் தொலைதூரத்தில் உள்ள தங்களது உறவினர்களுடன் பொது தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள உதவிகளை செய்துள்ளார்.
144 தடை உத்தரவால் தொலைபேசி, இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அஸ்கரின் செய்த உதவி பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இவரின் அணுகுமுறையை ஸ்ரீநகர் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதேபோல், சண்டிகரை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியான நித்யா என்பவர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். தால் ஏரி, ஆளுநர் மாளிகை, முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த இடங்களின் பாதுகாப்பை இவர்தான் கையாண்டு வருகிறார்.
சவாலான நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளான அஸ்கர், நித்யா ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வண்ணம் இருந்தன.