முறைகேடான பண பரிமாற்றம் : லைகா பட நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்திய அமலாக்கத்துறை !
லைகா பட நிறுவனத்தில் முறைகேடான பண பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது
லைக்கா பிரபல சினிமா பட தயாரிப்பு நிறுவனம் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி கதாநாயக நடிகர்களின் படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது . சமீபத்திய பொன்னியின் செல்வன் படத்தை இந்த நிறுவனம்தான் தயாரித்தது. கமலஹாசனின் இந்தியன் 2 படத்தையும் இந்த நிறுவனம்தான் தயாரிக்கிறது.
முறைகேடான பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக இந்த நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதனால் இந்த நிறுவனம் இது அமலாக்கத்துறை வடக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த நிலையில் லைகா நிறுவனம் மற்றும் அது சம்பந்தப்பட்ட எட்டு இடங்களில் நேற்று அமலாகத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
தியாகராய நகர் விஜயராகவாச்சாரி சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நான்காவது மாடியில் உள்ள லைகா நிறுவனத்தில் நேற்று காலை முதல் சோதனை நடந்தது .அடையாறு, காரப்பாக்கம் போன்ற இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிந்த பிறகு அது தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும் என்று அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.