குறைந்த விலையில், ஆறு நிமிடங்களில் ஒரு வெண்டிலேட்டர் தயாரித்து பொறியியல் பட்டதாரி அசத்தல்.!

குறைந்த விலையில், ஆறு நிமிடங்களில் ஒரு வெண்டிலேட்டர் தயாரித்து பொறியியல் பட்டதாரி அசத்தல்.!

Update: 2020-04-17 07:55 GMT

நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தால் வெண்டிலேட்டர் தேவை அதிகரித்துள்ளது. இதில் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஆக்சிஜன் அளவு, மொத்த காற்றின் அளவு, மூச்சு சுழற்சி ஆகியவற்றையும் கட்டுப்படுத்த இயலும், கருவி செயல்பாடில் ஏதானும் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக ஓசை எழுப்பி மருத்துவர்களை எச்சரிக்கும். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த  அகிலேஷ் பொறியியல் பட்டதாரி  மற்றும் அவரது குழுவினர் மூன்றாம் தலைமுறை வெண்டிலேட்டரை குறைந்த செலவில் ஏழு நாட்களில் உருவாக்கிய அசத்தியுள்ளனர்.

ஓசூரில் கிடைக்கும் பொருட்களை வைத்து, இந்த வென்டிலேட்டர் தயாரிப்பதாகவும், ஆறு நிமிஷத்தில் ஒரு வெண்டிலேட்டர் தயாரிக்க இயலும் அதுவும் முழுக்க ஓசூரில் கிடைக்கும் பொருட்களை வைத்தே தயாரிக்க முடியும் எனக் கூறிய பொறியியல் பட்டதாரி அகிலேஷ், பிற நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்தால் 2.5 லட்சம் செலவாகும் நிலையில் இதனை 40 ஆயிரம் செலவில் உருவாக்க முடியும் என தெரிவித்தார்.

இந்த வெண்டிலேட்டர் செயல்திறனை பார்த்த மருத்துவர்கள் பொறியாளர் அகிலேஷ்க்கு பாராட்டு தெரிவித்தனர்.

Similar News