உ.பி. பீகாரில் யாதவர்களின் வாக்குகளை அள்ளியதா பா.ஜ.க கூட்டணி- பீதியில் லாலு முலாயம் சிங் யாதவ்?பிரபல நாளேடு கருத்து கணிப்பு!!

உ.பி. பீகாரில் யாதவர்களின் வாக்குகளை அள்ளியதா பா.ஜ.க கூட்டணி- பீதியில் லாலு முலாயம் சிங் யாதவ்?பிரபல நாளேடு கருத்து கணிப்பு!!

Update: 2019-05-22 09:31 GMT


இந்திய அரசியல் முழுமையான ஜனநாயக அரசியல் என்று கூறி நாம் பெருமைபட்டாலும் ஆழமாக பார்க்கும் போது இது அப்பட்டமான ஒரு ஜாதி அரசியலாகும்.  அரசியல் வெற்றி, தோல்விகள் ஜாதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால் இன்றைய வரை ஜாதி பிரிவினைகள் சமூகத்தில் தலை தூக்கி நிற்கின்றன. இது சமச்சீரான பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளன.  1960 ஆண்டிலிருந்து இதே நிலைதான்.


ஆனால்  2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பிறகு வட இந்திய பகுதிகளில் சாதி அரசியல் மங்கி வருவதாகவும், ஊழலற்ற தேசிய அரசியல் குறித்த விழிப்புணர்வு வட நாட்டு வாலிபர்களுக்கு ஏற்பட்டுவருவதாகவும், குறிப்பாக உ.பி, பீகார் கிராமங்களில் சாதி அரசியலில் பின்னிக் கிடக்கும் படித்த யாதவ வாலிபர்கள் தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளனர்.


ஓ.பி.சி பிரிவில் நல்ல கல்வி, வேலைவாய்ப்பு பெற்றிருக்கும் யாதவர்கள் சாதி மக்களை வாக்கு வங்கிகளாக வைத்து ஊழல் செய்யும் அரசியல் தலைவர்கள் மீது வெறுப்படைந்து கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உ.பி சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அமோகமாக ஆதரவு தந்துள்ளதாகவும் Scroll என்கிற ஆங்கில ஆய்வு பத்திரிகை தகவல் தெரிவிக்கிறது.


 குறிப்பாக மத்திய, மாநில பாஜக அரசுகள் மேற்கொண்டு வரும் வளர்ச்சித்திட்டங்கள் , அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் , அனைவருக்கும் கழிவறை திட்டங்கள் மூலம் கிராமப்புறங்கள் அடைந்து வரும் வளர்ச்சியால் மக்கள் தங்கள் சாதி  உணர்வுகளை மறந்து, பாஜக வுக்கு ஆதரவு அளிப்பதாகவும் , குறிப்பாக மோடி பெயரை சொன்னால் அனைத்து வட நாட்டு கிராமங்களிலும் மதிப்புடன் பார்ப்பதாக துர்காபூராய் சேர்ந்த கிருஷ்ண முரளி யாதவ் கூறுகிறார்.


 கட்டிட மேஸ்திரியான அவர் கூறுகையில் கடந்த 3 தேர்தல்களாக யாதவாகிய நான் மோடியை விரும்பி பாஜகவுக்கு வாக்களித்துவருவதாகவும், எங்கள் கிராமங்களில் பெரும்பாலான யாதவ்கள் பாஜகவுக்குதான் ஆதரவு வாக்களித்துள்ளனர் என்றார். அதேபோல தலித் பகுதிகளிலும் மோடிக்கு ஆதரவாக அதிக அளவில் வாக்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.


 லாலு, தேஜஸ்வி , முலாயம்,  அகிலேஷ் யாதவ் ஆகியோரை விட மோடி அரசு திறமையுடன் சிறப்பாக ஆட்சி செய்வதால் பெரும்பாலும் யாதவ வாக்குகள் பாஜகவை நோக்கியே செல்கின்றன. நடந்து முடிந்த 2019 மக்களவை தேர்தலில் அதிக அளவிலான யாதவ வாக்குகள் இம்முறை பாஜகவுக்குத்தான். அதேபோல இதர பிற்பட்டோரான ஜாதவ் வாக்கு வங்கி யும், பிராமண வாக்கு வங்கியும் பாஜகவுக்கு மிக பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. முஸ்லிம் வாக்குகள் இம்முறை 3 ஆக சிதறியதாலும், மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவுக்கு மிக சிறிய வெற்றியே கிடைக்கும் எனவும், முன்பைவிட பாஜகவுக்கு அதாக வாய்ப்புள்ளதாக  ரைட் லாக் பத்திரிகையிலும் கூறப்பட்டுள்ளது.


Similar News