ஐ.நா-வின் மனித வளர்ச்சிக் குறியீடு பட்டியலில் முன்னேறிய இந்தியா : மத்திய மோடி அரசின் புதிய சாதனை

ஐ.நா-வின் மனித வளர்ச்சிக் குறியீடு பட்டியலில் முன்னேறிய இந்தியா : மத்திய மோடி அரசின் புதிய சாதனை

Update: 2018-10-05 17:35 GMT

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் வெளியிடப்பட்ட, மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா 130-வது இடத்தைப் பிடித்துள்ளது. மனித வளர்ச்சி (Human development) அல்லது மனித மேம்பாடு என்பது எல்லா வயதுடைய மக்களின் வாழ்க்கை, எல்லா சூழ்நிலைகலுக்கும் ஏற்றவாறு எதனால் மற்றும் ஏன் மாறிக்கொண்டிருக்கிறார்களா? அல்லது எல்லா காலாத்திலும் மாறாமல் இருக்கிறார்களா? என்பதைப் புரிந்து கொள்ள முயலும் ஒரு அறிவியலாகும். இது மனித நிலை குறித்த முக்கியமாக மனிதனின் முக்கிய திறன் அணுகுமுறை பற்றிய ஆய்வுகளை உள்ளடக்கியது.



மனித வளர்ச்சி அட்டவனையில் சமத்துவமின்மையையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஐ.நா சபையால் மனித வளர்ச்சியின் உண்மையான முன்னேற்றம் அளவீடு செய்யும் வழியாக பார்க்கப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கான ஒரு மாற்று அணுகுமுறை ஆகும், மேலும் சமூக நீதி மீது மேலும் கவனம் செலுத்துவதன் மூலம் முன்னேற்ற பாதையில் செல்கிறோமா? என்பதைப் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும்.
மனித வளர்ச்சி என்பது மனித திறமைகளின் விரிவாக்கம், தேர்வுதெடுப்புகளை விரிவுபடுத்துதல், சுதந்திரத்தை மேம்படுத்துதல், மற்றும் மனித உரிமைகளின் நிறைவேற்றம் ஆகியவற்றின் மூலம் விளக்கலாம்.  இதை இன்னும் எளிமையாக இப்படிக் கூறலாம். அதாவது உங்களது வளர்ச்சி மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வளர்தல் மற்றும் வாழ்க்கையில் அனுபவங்களின் மூலமும் மற்றும் புதிய விசயங்களை கற்பதன் மூலமாகவும் வளர்த்துக்கொள்வது என்றும் கூறலாம்.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் மனித வளர்ச்சியை. மனிதர்களின் விருப்ப தெரிவுகளை விரிவுபடுத்தும் செயல்களை செய்வது என்று கூறுகிறது. அந்த விருப்பத் தெரிவுகள் மூலம் மனிதன் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும், கல்வி பயிலவும், ஒழுக்கமான வாழ்க்கை வாழவும், அரசியல் சுதந்திரம் , மற்றம் உத்தரவாதமளிக்கப்பட்ட மனித உரிமைகள் மற்றும் பல்வேறு வகையான சுய-மரியாதையுடன் வாழ்வது என்று விளக்குகிறது.



மனித வளர்ச்சி குறியீட்டு எண் Human Development Index (HDI):



மனித வளர்ச்சி குறித்து அறிந்துகொள்ள அல்லது அளவீடு செய்வதற்கு ஐ.நா சபை ஏற்படுத்திய ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் மூலம் உருவாக்கப்பட்டது தான் மனித வளர்ச்சி குறியீட்டு எண் Human Development Index (HDI). இந்த குறியீட்டெண், பிறக்கும்போது கணிக்கப்படும் ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி கற்றல் குறியீடு (கல்வி கற்ற ஆண்டுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் கல்வி கற்கும் ஆண்டுகள் ஆகியவற்றின் சராசரி ஆண்டுகள்) மற்றும் மொத்த தேசிய வருமானத்தின் மூலதன சராசரி ஆகியவற்றின் மூலம் HDI கணக்கிடப்படுகிறது.



இந்த அளவீடானது, மனித திறமைகளின் பங்களிப்பு குறித்து முழுமையாக கணக்கிடவில்லையென்றாலும், உலக நாடுகள் அனைத்திலும் உள்ள பல்வேறு சமூதாயத்தில் மனித திறனை அளவிடுவதற்கான தரநிலையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளை வளர்ப்பதற்காகும் செலவு அல்லது பண்டமாற்று பொருட்கள் / சேவைகள், அதே போல் தனிநபர்களின் சொந்த நல்வாழ்வு பற்றிய கருத்துக்கள் போன்றவைகள் மனித வளர்ச்சிக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாத வருவாயகள்.மனித வளர்ச்சியின் பிற நடவடிக்கைகளுக்கான அளவீடுகள் மனித வறுமை குறியீட்டெண் (HPI) மற்றும் பாலின அதிகாரமளிப்பு அளவையும் உள்ளடக்கியதாகும். இது வளர்ச்சிக்கு பல அம்சங்களை அளிக்கும்.


இந்த நிலையில், ஐ.நா.சபை சார்பில், மனித வளர்ச்சிக் குறியீடு பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் மற்றும் தெற்கு ஆசிய அமைப்பும் இணைந்து உலக அளவில் மனித வளர்ச்சி குறியீடு கணக்கீடு நடத்தியது. இதில், மொத்தம் 189 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், இந்தியா கடந்த ஆண்டைவிட, தற்போது ஒரு படி முன்னேறி 131-ல் இருந்து 130வது இடத்தைப் பிடித்துள்ளது.



1990 முதல் 2017 வரையிலான கால இடைவெளியில் இந்தியாவின் பிறப்பு விகிதம் அதிகரித்தால் இதன் வளர்ச்சி மந்தமானது. இது தொடர்பாக, ஐ.நா கூறுகையில் ``இந்தியாவில் பாலின பாகுபாடு அதிகமாக உள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் பெண்கள் 11.6 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். 39 சதவிகித பெண்கள் மட்டுமே இரண்டாம் தர கல்வி வாய்ப்பை பெறுகின்றனர்; இதில் ஆண்கள் 64 சதவிகிதமாக உள்ளனர். பின்னர் கூலித் தொழிலிலும் ஆண்கள் 78.87 % மற்றும் பெண்கள் 27.27% உள்ளனர். இந்தியா இந்த பாகுபாடு இல்லாமல் முன்னேறினால்  விரைவில் 127வது இடத்தைப் பிடித்து விடும்'' என்று தெரிவித்துள்ளது.

Similar News