கனடா பொதுத்தேர்தலில் 17 இந்திய வம்சாவளியினர் வெற்றி !

கனடாவில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

Update: 2021-09-22 10:13 GMT

கனடாவில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

வட அமெரிக்காவைச் சேர்ந்தவரான ஐஸ்டின் ட்ரூடோ கனடா நாட்டின் பிரதமராக கடந்த 2015ம் ஆண்டு முதல் உள்ளார். இவரது ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், முன்னரே பொதுத்தேர்தலை நடத்தியுள்ளார்.

தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் லிபரல் கட்சிக்கு 156 இடங்கள் கிடைத்துள்ளது. பெரும்பான்மை பெறுவதற்கு இன்னும் 14 இடங்கள் வேண்டும். இருந்தபோதிலும் ஏற்கனவே இருந்த கூட்டணியே தொடரும் என்பதால் ஆட்சி மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News