ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்.. சுகாதாரத் துறையில் மத்திய அரசு எடுத்த உறுதி..
இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் மருத்துவ உபகரணத்துறை உறுதுணையாக உள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அந்நாட்டு மருத்துவ உபகரணத் தயாரிப்பு உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், மருத்துவ உபகரணத்துறை இந்திய சுகாதாரத்துறையின் அத்திவாவசிய மற்றும் ஒருங்கிணைந்த அங்கமாக இருப்பதாகக் கூறினார். கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பரிசோதனை உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் மருத்துவ உபகரணத்துறை உறுதுணையாக இருந்ததை நினைவு கூர்ந்தார்.
தற்போது 11 பில்லியன் டாலராக உள்ள மருத்துவ உபகரணத் துறையின் வளர்ச்சித்திறனை 2030-ம் ஆண்டுக்குள் 4 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சுகாதாரத்துறையின் வளர்ந்து வரும் தேவைக்கேற்ப வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாகவும் கூறினார். அடுத்த 25 ஆண்டுகளில் மருத்துவ உபகரண உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக உருவெடுக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு என்ற குறிப்பிட்ட மாண்டவியா, ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜி20 அமைப்பின் இந்தியாவின் தலைமைத்துவத்தின் தாரக மந்திரத்தின் மூலம், உலகளாவிய சுகாதார வசதி என்ற இலக்கை அடைய மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாகவும் கூறினார்.
உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்த அவர், இதற்கு ஏதுவாக அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதம் அனுமதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாவும் கூறினார். இதேபோன்று உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத்திட்டத்தின் மருத்துவ உபகரணத் துறைக்கு 400 மில்லியன் டாலர் அளவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
Input & Image courtesy: News