“அமெரிக்கா, சீனாவைவிட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலையில்தான் உள்ளது” - நிர்மலா சீதாராமன் தகவல்!!

“அமெரிக்கா, சீனாவைவிட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலையில்தான் உள்ளது” - நிர்மலா சீதாராமன் தகவல்!!

Update: 2019-08-23 13:04 GMT


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


சர்வதேச அளவிலேயே பொருளாதாரம் மந்த நிலையில்தான் உள்ளது. உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.


அமெரிக்கா, சீனாவைவிட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலையில்தான் உள்ளது. உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது.


பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பொருளாதார மந்த நிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு. இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வேகமான வளர்ச்சியில் இருந்து வருகிறது. அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


பொருளாதாரா சீர்திருத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும்.


கீழ் மட்டத்தில் உள்ள அனைத்தையும் உணர்ந்தே அரசு செயல்படுகிறது. அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.


* வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும்.


* கீழ் மட்டத்தில் உள்ள அனைத்தையும் உணர்ந்தே அரசு செயல்படுகிறது. அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காணப்படும்.


* இந்திய பொருளாதார நிலை சீராக உள்ளது, சிறுசிறு குறைபாடுகள் களையப்படும். ஜிஎஸ்டி வரியில் உள்ள சிக்கல்கள் களையப்படும், எளிமைப்படுத்தப்படும். எளிதாக தொழில் தொடங்கும் சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது.


* ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். நீண்டகால  குறுகியகால மூலதன ஆதாயங்கள் மீது கூடுதல் வரி விதிப்பு இனி கிடையாது.


* மூலதன சந்தையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, நிதி எண் 2 சட்டம் 2019- ஆல் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெற முடிவு  செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முந்தைய நிலை மீட்டமைக்கப்படுகிறது.


* வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை.


* பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கு ஊக்கம் தரப்படும்.


* ஜி.எஸ்.டி கவுன்சிலோடு வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசித்து, பணம் திரும்ப செலுத்தும் முறையில் உள்ள சிக்கல்கள் களையப்படும்.


* கடந்த 2014-இல் இருந்து சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மத்திய அரசின் முதன்மை பணியாக அதுவே உள்ளது, ஜி.எஸ்.டி இன்னும் எளிமையாக்கப்படும்.


* கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு மீறல்கள் கிரிமினல் குற்றமாக  கருதப்படாது. அதற்கு பதிலாக சிவில் குற்றமாகவே  கருதப்படும்.


* 2019 அக்டோபர் 1-இல் அல்லது அதற்குப் பிறகு அனைத்து வருமான வரி உத்தரவுகள், அறிவிப்புகள், சம்மன், கடிதங்கள் போன்றவை மையப்படுத்தப்பட்ட கணினி அமைப்பு மூலம் வழங்கப்படும்.


* ஸ்டார்ட் அப் நிறுவன முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்கப்படும். சிறு, குறு நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் தொடரும். மத்திய  பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்றும்.


* பொதுத்துறை வங்கிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்த மூலதன உதவி தொடரும். வங்கிகளுக்காக மூலதன உதவி மூலம் கடன் வளர்ச்சி அதிகரிக்கும்.


* வங்கிகளின் மறுமூலதனத்துக்காக அரசு, ரூ.70,000 கோடி உடனடியாக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


* ஒரே நாளில் தொழில் நிறுவனம் தொடங்குவதற்கான சூழ்நிலை உள்ளது.  சட்ட விதிகள் தொடர்பான அனைத்து சிக்கல்களும் உடனுக்குடன் களையப்படுகிறது


இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


Similar News