அரசின் முயற்சியால் உலக பொருளாதார நெருக்கடி நிலையையும் தாண்டி, இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வரும் பணவீக்கம் - IMF வெளியிட்ட ஆய்வறிக்கை.!

அரசின் முயற்சியால் உலக பொருளாதார நெருக்கடி நிலையையும் தாண்டி, இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வரும் பணவீக்கம் - IMF வெளியிட்ட ஆய்வறிக்கை.!

Update: 2019-10-03 12:44 GMT

அமெரிக்க-சீனா வர்த்தக போரின் தாக்கம் உலக அளவில் எதிரொலித்து வரும் நிலையிலும், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகிறது. பாஜக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததில் இருந்து பணவீக்கம் கட்டுக்குள் இருந்து வருகிறது.


முந்தைய ஆட்சி காலங்களில் பொருளாதார நிபுணர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் இருந்தும், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. ஆனால் 2014-க்கு பிறகு பணவீக்கம் கட்டுக்குள் இருந்து வருவதை IMF வெளியிட்ட ஆய்வறிக்கை காட்டுகிறது.


பண வீக்கம் குறைவாக இருப்பதால், மத்திய ரிசர்வ் வங்கியால் நிம்மதியாக, வட்டி விகிதங்களைக் குறைக்க முடிந்து இருக்கிறது. இந்த பணவீக்கம் குறைவாக இருப்பது ஒரு பெரிய வரம் எனவும் குறிப்பிடப்படுகிறது.


இதுவரை மத்திய ரிசர்வ் வங்கி 1.10 % வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறது. நாளை (அக்டோபர் 04, 2019 அன்று) நடக்க இருக்கும் வட்டி விகித கூட்டத்திலும் மேலும் வட்டியைக் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஒரு பக்கம் உலக பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் இந்தியாவில் எதிரொலித்தாலும், அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் காரணமாக ஒவ்வொன்றாக சீரமைக்கப்பட்டு வருகிறது.






Similar News