யோகி பாபுவுக்கு ஓகே சொல்வாரா நயன்தாரா?

யோகி பாபுவுக்கு ஓகே சொல்வாரா நயன்தாரா?

Update: 2020-04-15 11:10 GMT

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் உச்சத்திலிருப்பார்கள். அப்படி தற்போது உச்சத்திலிருப்பவர் யோகி பாபு. தற்போதைய நிலவரப்படி ஒரு கால்ஷீட்டுக்கு சுமார் 7 லட்சம் வரை சம்பளமாகப் பெற்று வருகிறார் யோகி பாபு. இந்நிலையில் கதாநாயகியை மையமாகக் கொண்டு திரைக்கதை, வசனம் எழுதிக் கதை ஒன்றைத் தயார் செய்து வைத்திருக்கிறாராம் யோகி பாபு.

எஸ்.பி.சவுத்ரியின் 18ரீல் புரொடக்ஷன் இப்படத்தினை தயாரிக்கிறதாம். இதற்கு நாயகியாக நடிக்க நயன்தாராவை அணுக்கியிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் காஜல் அகர்வாலை அணுகத் திட்டமிடப்பட்டிருக்கிறதாம். 

Similar News