பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவு போட்ட அரசை எச்சரிக்கும் இஸ்லாமிய மதகுருமார்கள், நமாஸை தொடர்வோம் என அறிவிப்பு.!

பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவு போட்ட அரசை எச்சரிக்கும் இஸ்லாமிய மதகுருமார்கள், நமாஸை தொடர்வோம் என அறிவிப்பு.!

Update: 2020-04-15 15:22 GMT

ஊரடங்கு உத்தரவு விதித்த பாகிஸ்தான் அரசை எச்சரிக்கும் இஸ்லாமிய மதகுருமார்கள், மசூதியில் வெகுஜன-நமாஸை தொடர்வோம் என அறிவித்தனர்.

கொரோனா வைரஸ் காரணமாக மத சபைகளுக்கு தடை விதித்த இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு 50 க்கும் மேற்பட்ட மூத்த மதகுருக்கள் கொண்ட குழு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகாரிகள் முதலில் மத விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், மசூதியில் அதிகமான பேர் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் 5,715க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு பகுதியாக, ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பிரார்த்தனை செய்ய மசூதிக்கு செல்ல தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்ததை அடுத்து, மதகுருமார்களிடம் இருந்து கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது.

கூட்டமாக சுற்ற வேண்டாம் என அரசு தெரிவித்து இருந்தாலும், வஃபாகுல் மதரிஸ் அல் அரேபியாவைச் சேர்ந்த ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத்தின் 53 க்கும் மேற்பட்ட மூத்த மதகுருமார்கள் பிரார்த்தனை சபைகளுக்கு தடை விதிப்பது பற்றி விவாதிக்க ஜாமியா தாருல் உலூம் ஜக்ரியாவில் திங்கள்கிழமை ஒரு கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில் ஜாமியத்-இ-உலேமா இஸ்லாம், ஜாமியத்-இ-உலேமா பாகிஸ்தான், ஜமாஅத்-இ-இஸ்லாமி மற்றும் தான்சீம்-இ-இஸ்லாமி நாட் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் இந்த முடிவு எடுத்ததாக தெரிகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை அன்று தேசிய ஊரடங்கு உத்தரவை மேலும் 14 நாட்கள் நீட்டிப்பதாக  அறிவித்தார். இதனால் அதிகரித்து வரும் வேலையின்மையைக் குறைக்க அத்தியாவசியத் தொழில்களுக்கு அரசு விலக்குகளை அளிக்கும் என கூறியது.

Similar News