தொகுதிக்கு 200 கோடி கைமாற்ற தி.மு.க திட்டமா..? கசிந்த இரகசிய தகவல் - துரைமுருகன் வீட்டு சோதனையில் திடுக்கிட வைக்கும் தகவல்கள்.!

தொகுதிக்கு 200 கோடி கைமாற்ற தி.மு.க திட்டமா..? கசிந்த இரகசிய தகவல் - துரைமுருகன் வீட்டு சோதனையில் திடுக்கிட வைக்கும் தகவல்கள்.!

Update: 2019-03-30 05:27 GMT

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில், வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காந்திநகர் பகுதியில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு, வருமானவரித் துறை துணை ஆணையர் விஜய் தீபன் தலைமையில் மூன்று அதிகாரிகள் நேற்றிரவு சென்றனர். இதனிடையே, அங்கு திரண்ட திமுகவினர், முறையான ஆவணங்கள் இன்றி சோதனை நடத்த வந்ததாக கூறி, வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதைத்தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு துரைமுருகன் வீட்டிற்குள் சென்ற தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். விடிய, விடிய சோதனையின் முடிவில் சில ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.


இதனிடையே துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நீடித்து வருகிறது. ஆனால், வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்து விட்டதாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று திமுக எம்.எல்.ஏ ஒருவரின் தோட்டத்தில் பணம் கைமாற்றப்படுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தனர். திமுகவினரின் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் நேரடியாகவே கட்சியின் மூத்த தலைமை ஒருவரின் வீட்டில் பணம் கைமாற்றப்பட்டால் சந்தேகம் வராது என்கிற நோக்கில், துரைமுருகன் வீட்டிற்கு பணம் கொண்டுவரப்படுவதாக இரகசிய தகவல் வெளியானது. தொகுதிக்கு 200 கோடி வரையில் கைமாறும் என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதனை தொடர்ந்தே சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.


Similar News