தேசிய கொடியை தவிர்த்த மாநிலம் - இன்று ஜம்மு-காஷ்மீரில் பறக்கும் மூவர்ண கொடி : வரலாறு படைத்த மோடி சர்கார்!
தேசிய கொடியை தவிர்த்த மாநிலம் - இன்று ஜம்மு-காஷ்மீரில் பறக்கும் மூவர்ண கொடி : வரலாறு படைத்த மோடி சர்கார்!;
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வகையில் இந்திய அரசியல் சாசனத்தில் 370 மற்றும் 35ஏ பிரிவுகள் இணைக்கப்பட்டன. இந்த பிரிவுகளால் காஷ்மீர் அரசும், மக்களும் பல்வேறு சலுகைகளை அனுபவித்து வந்தனர். ஆனாலும் அங்கு பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
கடந்த 70 ஆண்டாக அமலில் இருந்த இந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. பாராளுமன்ற தேர்தலின் போதே பா.ஜ.க. அரசு வாக்குறுதி அளித்திருந்த நிலையில், ஆட்சி அமைத்ததும் அதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்தானது. மேலும் அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படுகிறது.
காஷ்மீருக்கென தனிக்கொடி பயன்படுத்தப்பட்டு வந்தது. அங்குள்ள தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களிலும் பறக்க விடப்பட்டு வந்தது.இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள தலைமை செயலகத்தில் ஜம்மு காஷ்மீர் கொடியுடன் இந்திய மூவர்ண கொடியும் பறக்க விடப்பட்டு உள்ளது.