பொய் சொல்லி மாட்டிக்கொண்ட கமல்ஹாசன் - வெளுத்து வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட கமல்ஹாசன் - வெளுத்து வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்

Update: 2020-04-20 04:51 GMT

மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி? என கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கமலஹாசனின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தவறான கருத்தை கமலஹாசன் பதிவிட்டு உள்ளதாகவும் ஒரு கருத்தை பதிவு செய்தால் அது உண்மையா, பொய்யா என்று ஆராய்ந்து பதிவு செய்ய வேண்டும், போற போக்கில் சேறை வாரி வீசுவது போல பேசினால் அந்த சேறு அவரின் மேலே பாயும்.

பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடிக்கிறார்கள் என்று பொய் சொல்லி மீனவ மக்களை திசை திருப்புகிற செயலை கமலஹாசன் தற்போது செய்ய வேண்டாம், இந்தக் கப்பலை பார்த்தார்கள் என்று சொல்ல முடியுமா? அப்படி எந்த கப்பலுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை எனக் கூறினார்.

20 நாட்டிக்கல் மைல் தூரம் போகும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு 200 முதல் 300 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மின் பிடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் எப்படித் தெரியும்? கமலஹாசன் ஏதோ பார்த்தது போல சொல்வது மலிவான அரசியல்! இந்நேரத்தில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை யோசனை செய்தால் மக்கள் போற்றுவார்கள் இல்லை என்றால் தூற்றுவார்கள்.

மேலும் முதலமைச்சர் உத்தரவின் பேரில் 4.5 லட்சம் மீனவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் இன்று செலுத்தப் போவதாக தெரிவித்தார்.

Similar News