போராளிகள் கவனத்திற்கு -அப்துல்கலாம் விருதின் பெயரை மாற்றிய ஜெகன் மோகன் ரெட்டி!

போராளிகள் கவனத்திற்கு -அப்துல்கலாம் விருதின் பெயரை மாற்றிய ஜெகன் மோகன் ரெட்டி!

Update: 2019-11-06 05:59 GMT

ஆந்திர மாநிலத்தில் வருடம்தோறும் சிறந்த மாணவர்களுக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதும் பல அதிரடி முடிவுகளை எடுத்துவந்தார். இதற்கு தமிழகத்தின் போராளிகள் தமிழகத்து முதல்வர் போல் ஜெகன் மோகன் ரெட்டியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் அந்த அதிரடி முடிவுகளில் ஒன்றுதான் அப்துல்கலாம் பெயர் மாற்றம்.


சிறந்த மாணாக்கர்களுக்கு முன்னாள் குடியராசு தலைவரும் இஸ்ரோ நாயகன் அப்துல் கலாம் பெயரில் ஏபிஜே அப்துல் கலாம் பிரதிபா புரஸ்கார் விருது வழங்கி வந்தது ஆந்திர அரசு அவ்விருதின் பெயரை ஜெகன் மோகன் ஓய்எஸ்ஆர் வித்யா புரஸ்கார் என தந்தை பெயரில் மாற்றினார் ஜெகன்.


இதற்கு ஆந்திர முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஜெகனை தூக்கி வைத்து கொண்டாடிய தமிழக போராளிகள் மௌனம் காத்தனர். ஆந்திர முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதையொட்டி அந்த முடிவில் பின் வாங்கிய ஜெகன் அந்த முடிவை மாற்றி கொண்டார்.


இங்கு தமிழ்நாட்டில் ஜெகன்மோகனை பாருங்கள் என அவரது ஆட்சியை பாருங்கள் என போராளிகள் தூக்கி வைத்து கொண்டாடினர். ஆனால் தமிழன் அப்துல் கலாம் பெயரில் வழங்கிய விருதின் பெயரை மாற்றியதற்கு சப்தம் இல்லாமல் இருப்பது அவர்களின் உண்மைத்தன்மையை காட்டுகிறது.






Similar News