#JusticeForRinkuSharma கொடூரம்..! ராமர் கோவில் நன்கொடை.. முதுகில் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 26 வயது இளைஞர்..!
26 வயதான ரிங்கு சர்மா அவரது குடும்ப உறுப்பினர்களின் கண் முன்னால் அவரது வீட்டிலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு திரட்டப்படும் நன்கொடை பேரணியின் மேல் துப்பாக்கி சூடு நடத்துவதும், அதில் ஈடுபடுபவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவதும் பல பகுதிகளில் வழக்கமாகி வருகிறது.
பிப்ரவரி 10 (புதன்கிழமை) அன்று ரிங்கு சர்மா என்ற பஜ்ரங் தள உறுப்பினரை சுமார் 25-30 பேர் கொண்ட ஒரு கும்பல் கொடூரமாக குத்திக் கொலை செய்ததை அடுத்து டெல்லியின் மங்கோல்பூரி பகுதியில் பதற்றம் நிலவியது. 26 வயதான ரிங்கு சர்மா அவரது குடும்ப உறுப்பினர்களின் கண் முன்னால் அவரது வீட்டிலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார். பஜ்ரங் தள இந்து அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பஜ்ரங் தளம் மேற்கொண்ட நன்கொடை இயக்கத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டார்.
இந்தி நாளேடான ஜாக்ரான் வெளியிட்டுள்ள செய்தியின் படி, புதன்கிழமை இரவு ரிங்குவின் வீட்டிற்குள் நுழைந்து அவரை கொடூரமாக கொன்ற நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் முகமது இஸ்லாம், டேனிஷ் நஸ்ருதீன், தில்ஷான் மற்றும் தில்ஷாத் இஸ்லாம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன.
ரிங்கு சர்மா டெல்லியின் மங்கோல்பூரி பகுதியில் வசிப்பவர். இந்து அமைப்பிற்கு தன்னார்வ சேவையை வழங்குவதுடன், ரிங்கு சர்மா பாசிம் விஹாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றினார். தாயார் ராதா தேவி, தந்தை அஜய் சர்மா மற்றும் சகோதரர்கள் அங்கித் மற்றும் மனு சர்மா ஆகியோர் இவர் குடும்ப உறுப்பினர்களாவர்.
இந்த சம்பவம் ரிங்கு ஷர்மாவிற்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதற்காக நடத்த நன்கொடை திரட்டலின் காரணமாகவே இது நடந்தகாக கூறப்படுகிறது. இறந்தவரின் உறவினர்களின் கூற்றுப்படி, அயோத்தியின் ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயில் கட்டுவது தொடர்பாக கடந்த மாதம் இப்பகுதியில் விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேரணியின் போது கட்டுமானத்திற்காக நிதி சேகரித்து வந்த ரிங்கு ஷர்மாவுடன் தாக்குதல் நடத்தியவர்கள் தகராறு செய்தனர். பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தலையிட்டதையடுத்து இந்த சர்ச்சை தீர்க்கப்பட்டது.