சிகிச்சைக்குப்பின் ஓய்வு : நாளை முதல் ஒரு மாதத்துக்கு கமலஹாசன் வெளியே வரமாட்டார்!

சிகிச்சைக்குப்பின் ஓய்வு : நாளை முதல் ஒரு மாதத்துக்கு கமலஹாசன் வெளியே வரமாட்டார்!

Update: 2019-11-24 08:43 GMT

சென்ற 2016 ஆம் ஆண்டு கமலஹாசன் மாடிப்படியிலிருந்து இறங்கி வரும்போது கீழே தவறி விழுந்தார். இதில் அவரது வலது கால் எலும்பு முறிந்தது. அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் முறிவு ஏற்பட்ட இடத்தில் ஸ்டீல் பிளேட் வைத்து பொருத்தினர். அதன்பிறகு 6 மாதகாலம் ஓய்வில் இருந்த அவர் பின்னர் வழக்கமான பணிகளை கவனிக்கத் தொடங்கினார்.
முழுமையாக குணம் அடைந்த நிலையில் காலில் பொருத்தப்பட்ட பிளேட்டை அவர் குறித்த நேரத்தில் நீக்காமல் அரசியலிலும், சினிமா என மிகவும் பிசியாக இருந்தார். இந்த நிலையில் உள்ளே வைக்கப்பட்ட ஸ்டீல் பிளேட் எதிர்விளைவுகளை கொடுத்ததை அடுத்து தற்போது டாக்டர்களின் கட்டாய அறிவுரையை ஏற்று நாளை அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்.



இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமலுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து ஏற்கனவே பொருத்திய ஸ்டீல் பிளேட்டை நீக்கி சிகிச்சை அளிக்கின்றனர். அதன்பிறகு வீடு திரும்பும் கமல் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் ஒரு மாதம்  ஓய்வில் இருக்க முடிவு செய்திருக்கிறார் என கூறப்படுகிறது.


Similar News