கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல்துறையுடன் முன்னாள் படைவீரர்கள் பணியமர்த்தல் : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல்துறையுடன் முன்னாள் படைவீரர்கள் பணியமர்த்தல் : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு

Update: 2020-04-09 03:19 GMT

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல்துறையுடன் முன்னாள் படைவீரர்களை பணியமர்த்தப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தகவல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 60 வயதுக்கு உட்பட்ட திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள் 10.04.2020 முதல் 20.04.2020 வரை காவலர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்கான மதிப்பு ஊதியம் ஏற்கனவே தேர்தல் பணியில் வழங்கப்பட்டது போல் அளிக்கபடும்.பணியமர்வு மாவட்ட எஸ்பி மூலம் முன்னாள் படைவீரர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலே பணியமர்த்தப்படும் என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் நாட்டு நலன் கருதி தானாகவே முன் வந்து 10.04.2020 முற்பகல் 8.00 மணிக்கு தங்கள் அருகாமையிலுள்ள காவல்நிலையத்தை அணுகி பணியில் சேர்ந்து கொள்ள அறிவுறுத்தப்படு கிறார்கள்.

பணியின் போது உரிய பாதுகாப்பு சாதனங்கள் காவல் துறை மூலம் வழங்கப்படும். மேலும் விவரம் அறிய முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலை பேசி 04652-243515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த். மு. வடநேரே. தெரிவித்துள்ளார்.

  

Similar News