15YearsOfChandramukhi - சந்திரமுகியை இயக்கியிருக்க வேண்டிய கே.எஸ்.ரவிகுமார் - சுவார்ஸ்ய தகவல்கள்...

15YearsOfChandramukhi - சந்திரமுகியை இயக்கியிருக்க வேண்டிய கே.எஸ்.ரவிகுமார் - சுவார்ஸ்ய தகவல்கள்...

Update: 2020-04-14 05:36 GMT

இன்றுடன் சந்திரமுகி வெளியாகி 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரையுக வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் சந்திரமுகி குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு தொகுத்தளித்துள்ளோம்.

- மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் உருவான 'மணிசித்திரத்தாழு' எனும் படத்தை தொலைகாட்சி ஒளிபரப்பில் கண்ட பி.வாசு அதன் உரிமையை சில லட்சங்கள் கொடுத்து வாங்கினார். பின்னர் அதில் முக்கியமான பகுதிகளை வைத்து கொண்டு திரைகதையை மாற்றியமைத்து 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் கன்னட சூப்பர்ஸ்டாரான விஷ்னு வரதனை வைத்து இயக்கினார்.

- பாபா படத்தின் தோல்வியால் மிகவும் துவண்டு போயிருந்த ரஜினி, இனி திரைப்படங்களில் நடிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்த சமயம் அது. வழக்கமாக ஓய்வெடுக்க பெங்களூர் செல்லும் ரஜினி, அங்கு மாறு வேடத்தில் உலா வருவது வழக்கம். அப்படி அவர் மாறு வேடமணிந்து திரையங்கிற்க்கு சென்று 'ஆப்தமித்ரா' படத்தினை பார்த்து ரசித்துள்ளார். அவருக்கு அந்த படம் மிகவும் பிடித்து போக உடனடியாக பி.வாசுவை தொடர்பு கொண்டவர் தனக்கு அந்த அப்படத்தின் தமிழ் உரிமை வேண்டும் என்பதை கூறியுள்ளார்.

- சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் 'மன்னன்' உள்ளிட்ட படங்களில் ரஜினி நடித்திருந்தாலும் நீண்ட வருடங்களாக தங்கள் நிறுவனத்திற்க்கு அவர் படம் நடித்து தர வேண்டும் என்று கேட்டு கொண்டே இருந்துள்ளனர் அதன் நிர்வாகிகள். ரஜினியுடன் 'படையப்பா' படத்தில் நடித்த போது சிவாஜியும் ரஜினியிடம் தனது நிறுவனத்து படம் நடித்து தர கேட்க் தான் நிச்சயம் நடித்து தருவதாக கூறியுள்ளார். 2001ம் ஆண்டு சிவாஜி உடல்நல குறைவால் மறைந்து போனார். அப்பொழுது ரஜினி 'பாபா' படத்தின் நடித்து கொண்டிருந்தார். இதனால் தான் அடுத்த படம் நடிக்க வேண்டு என முடிவு செய்தவுடன் சிவாஜி புரொடக்ஷன்சை தொடர்பு கொண்டு தேதிகளை கொடுத்தார். அப்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்த போதும் ரஜினி பட வாய்ப்பை விடுவதா என எண்ணிய சிவாஜி குடும்பத்தினர் படத்திற்க்கு பணம் சேகரிக்கும் பொருட்டு ராமாவரத்திலிருந்த தங்கள் இடத்தை விற்றனர். (தற்போது அங்கு தன டி.எல்.எஃப் ஐடி பார்க் இயங்கி வருகிறது).

- சந்திரமுகியை இயக்க ரஜினியின் முதல் சாய்ஸ் கே.எஸ்.ரவிகுமார் தான். அவரை தொடர்பு கொண்டு 'ஆப்தமித்ரா' படத்தை பார்க்க சொல்லியுள்ளார். அவரும் பார்த்து விட்டு நன்றாக இருப்பதாகவும், தன்னை விட இந்த படத்தினை இயக்க சரியான இயக்குனர் 'ஆப்தமித்ரா' திரைகதையை உருவாக்கிய பி.வாசு தான் என கூற, ரஜினியும் பி.வாசுவை இறுதி செய்துள்ளார்.

- தமிழுக்காக மீண்டும் திரைகதைய மாற்றி எழுதிய பி.வாசுவிடம், படத்தில் கண்டிப்பாக வடிவேலு இருக்க வேண்டும் என ரஜினி கூறியுள்ளார். அப்போது வடிவேலு உச்சத்திலிருக்க, ரஜினியே வடிவேலுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். அதன் பின்னர் தான் அந்த நகைச்சுவை பகுதி எழுதப்பட்டுள்ளது. 'ஆப்தமித்ராவி' அந்த பகுதி கிடையாது. பாபா தோல்விக்கு பின் வரும் படம் என்பதால் வெற்றி பெற்ற தீர வேண்டு என எண்ணிய ரஜினி கதை விவாதத்தில் அமர்ந்து தனது பங்களிப்பை அளித்துள்ளார். படத்தில் வேட்டைய உச்சரிக்கும் பிரபல வசனமான 'லக லக லக' ரஜினி சொன்னதாம். அவ்வப்போது இமயமலைக்கு சென்று தியானம் செய்யும் ரஜினி ஒருமுறை ஒரு அங்கு ஒருவர் 'லக லக லக' என கத்தி கொண்டே சென்றதை பற்றி கூறி அந்த வசனத்தை இனைத்தாராம். அதே போல் 'வேட்டையன்' பாத்திரமும் கன்னடத்தில் கிடையாது.

- சந்திரமுகி படத்தில் யாரை நாயகியாக நடிக்க வைப்பது என விவாதம் எழுந்த போது, ஹரியின் 'அய்யா' திரைப்படத்தில் ஒரு புதுமுக நடிகை நடித்து வருவதாகவும் அவர் நன்றாக இருக்கிறார் எனவும் கூறப்பட அவரை சென்று பார்த்த படக்குழு உடனடியாக ஒப்பந்தம் செய்தது. அவர் தான் இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா.

- முதலில் சந்திரமுகி வேடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் சிம்ரன். அவர் ஒப்பந்தமான சில நாட்களிலேயே கர்பம் திருந்திருந்ததால், படத்திலிருந்து விலகினார். அதனை தொடர்ந்து ஒப்பந்தம் செய்யப்பட்டவர் தான் ஜோதிகா.

- இளையராஜாவை தான் முதலில் சந்திரமுகி படத்திற்க்கு இசையமைக்க அனுகியுள்ளனர். அவர் மறுத்த காரணத்தால் பின்னர் வித்யாசாகர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் பரவி சூப்பர் ஹிட் ஆனது.

- படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அனைத்தையும் ரஜினியின் மகளான சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் செய்திருந்தது.

- 1944ம் ஆண்டு வெளியான 'ஹரிதாஸ்' சுமார் 784 நாட்கள் ஓடியது தமிழ் திரையுலகின் சாதனையாக இருந்தது. அதனை 62 ஆண்டு கழித்து 890 நாட்கள் ஓடி 'சந்திரமுகி' உடைத்தது. இன்றளவும் இனியும் இந்த சாதனையை எந்த படமும் முறியடிக்க வாய்ப்பில்லை.

- சந்திரமுகி 2 படத்தின் திரைகதையை சில ஆண்டுகளுக்கு முன்னரே முடித்து விட்ட பி.வாசு, முதலில் ரஜினியை தான் அனுகியிருக்கிறார். சில காரணங்களால் அவர் அந்த வாய்ப்பை மறுக்க தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் அது உருவாகவிருக்கிறது. 

Similar News