உள்ளாட்சித் தேர்தல் முடிவால் அதிர்ந்தது தி.மு.க! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு திடீர் ஆதரவு! அந்தர் பல்டியின் அதிர்ச்சி பின்னணி!

உள்ளாட்சித் தேர்தல் முடிவால் அதிர்ந்தது தி.மு.க! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு திடீர் ஆதரவு! அந்தர் பல்டியின் அதிர்ச்சி பின்னணி!

Update: 2020-01-09 09:30 GMT

பாராளுமன்றத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதா கொண்டு வந்தபோது இரு அவைகளிலும் திமுக கடுமையாக எதிர்த்தது. அது சட்டமாக்கபட்ட பிறகும் எதிர்த்து குரல் எழுப்பி வந்தது.


“இந்த சட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு துரத்தி விடுவார்கள்” என்று தவறான பிரச்சாரத்தை அப்பாவி முஸ்லிம்கள் மத்தியில் திட்டமிட்டே திமுக பரப்பியது. அவர்களை போராட்டத்திற்கு தூண்டியது. திமுகவின் உண்மையான நோக்கமே கலவரம் நடக்க வேண்டும், அதில் பலர் சாக வேண்டும், அதை வைத்து அரசியலில் பிழைப்பு நடத்த வேண்டும் என்பதுதான்.


இதற்காக பல முனைகளில் போராட்டங்களை தூண்டி வந்தது. சென்னையில் பிரம்மாண்ட பேரணிகளையும் நடத்தியது.


இதன் மூலம் திமுக கூட்டணிக்கு உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று திமுக கனவு கண்டது. ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திமுக தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் 38 இடங்களை கைப்பற்றி அசுர சாதனை படைத்து இருந்தது. எனவே திமுக, உள்ளாட்சித் தேர்தலில் குறைந்தபட்சம் 80 சதவீத இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் திமுகவின் கனவில் மண் விழுந்தது. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தலில் மொத்தமுள்ள 5090 இடங்களில் திமுகவால் 2099 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இது மொத்தம் உள்ள இடங்களில் 41 சதவீதமாகும். அதாவது மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பதில் பாதியைகூட நிறைவேற வில்லை என்பதே உண்மை.


திமுகவின் இந்த மாபெரும் இழப்பிற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தபோதுதான் மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் காத்திருந்தது. முக்கியமாக திமுகவின் இந்து விரோத போக்கு அதனுடைய ஓட்டு வங்கியை பதம் பார்த்துவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டத்தை கண்மூடித்தனமாக வேண்டுமென்றே முஸ்லிம்களின் ஓட்டுக்காக திமுக எதிர்த்ததை, பெரும்பான்மை ஹிந்து சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. திமுகவிற்கு ஆதரவான இந்துக்களும் இதனை விரும்பவில்லை.


இப்படி பெரும்பான்மை இந்து சமுதாயத்தின் வாக்கை பெருமளவில் திமுக இழந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திமுகவுக்கு வாக்களித்த ஏராளமான இந்துக்கள் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து உள்ளனர்.


இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை தெரிந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிரடியாக நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். குறிப்பாக தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுகவின் நிலைபாட்டை மாற்றியுள்ளார். அவர் திமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் மூலம் சட்டமன்றத்தில் இதனை பதிவு செய்துள்ளார்.


இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய துரைமுருகன், “நாங்கள் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்க வில்லை” என்று அழுத்தமாக பதிவு செய்தார்.


அதேநேரம் “கவிழ்ந்து விழுந்தேன் மீசையில் மண் ஒட்டவில்லை” என்பது போல, “இந்த சட்டத்தில் திருத்தம் கேட்டோம். ஆனால் எதிர்க்கவில்லை, அவ்வளவுதான்” என்பதுபோல் பூசி மெழுகினார்.


ஆகவேதான் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுகவின் போராட்டங்கள் கூர் மழுங்கியது.


மேலும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஓட்டு வங்கிக்காக பெரும்பான்மை சமுதாயமான இந்துக்களின் ஓட்டுக்களை தொடர்ந்து திமுக இழந்து வருவது, அதனுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. அடுத்து நடக்க உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களிலும் இதே நிலை நீடிக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.


Similar News