அரசியலில் இறங்க உள்ளாரா மகேந்திர சிங்க் டோனி?
அரசியலில் இறங்க உள்ளாரா மகேந்திர சிங்க் டோனி?;
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்க் டோனி அவர்களை புகழ்ந்து தனது டிவிட்டார் பக்கத்தில் ஒரு பதிவு செய்திருந்தார். 2016 ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்த போட்டியின் புகைப்படத்தை பதிவுசெய்து டோனியை புகழ்ந்தார்.
இந்த பதிவை விராட் கோஹ்லி பதிவிட்ட காரணமே தெரியாததால், இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்க் டோனி கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்தன. டோனி தனது ஓய்வை செய்தியாளர் சந்திப்பு மூலம் கூறுவார் என்றும் செய்திகள் வந்தன, ஆனால் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன் மகேந்திர சிங்க் டோனி அரசியலிற்கு வருவார் என்ற செய்திகளும் வெளிவந்தன. தனது அரசியல் பிரவேசத்தை தனது சொந்த மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தில் தொடங்குவார் என்றும் கூறப்பட்டது.
ஜார்கண்ட் மாநிலத்தின் தேர்தல் சில மாதங்களில் வருவதால் டோனி அரசியல் பிரவேசம் செய்ய கூடிய சீக்கிரம் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்றும் பேசப்படுகிறது. இதே போல் சில மாதங்களுக்கு முன் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பிர் அரசியலிற்கு வந்து பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
ஜார்கண்ட் தேர்தல் சில மாதங்களில் வருவதாலும், டோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கான குறிகள் அதிகமாக இருப்பதாகவும், டோனி அரசியலில் நுழைய வாய்ப்புகள் அதிகம். காலமே இதற்க்கு பதில் அளிக்கும்.