கி.வீரமணியை தொடர்ந்து, வைரமுத்துவை துரத்தியடித்த மலேசிய இந்துக்கள்! ஆண்டாள், ஆட்டிப்படைக்கிறாள்!

கி.வீரமணியை தொடர்ந்து, வைரமுத்துவை துரத்தியடித்த மலேசிய இந்துக்கள்! ஆண்டாள், ஆட்டிப்படைக்கிறாள்!

Update: 2019-11-29 09:55 GMT

கவிஞர் வைரமுத்து இந்து தெய்வங்களையும், இந்து நம்பிக்கைகளையும் இழிவுபடுத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது.


இவர், தமிழாற்றுப்படை என்ற பெயரில் கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். அப்போது, இந்துக்கள் வழிபடும் ஆண்டாளை, தேவதாசி என்று இழிவுபடுத்தி கட்டுரை வடித்தார். இது ஒட்டுமொத்த இந்துக்கள் மனதிலும் வேல் கொண்டு பாய்ச்சுவது போல் அமைந்தது. இந்துக்கள் முதல்முறையாக வைரமுத்துக்கு எதிராக கொதித்து எழுந்தனர். பல போராட்டங்களை நடத்தினர். கண்டனங்களை அழுத்தமாகப் பதிவு செய்தனர்.


அதன்பிறகும் பகுத்தறிவு என்ற போர்வையில் இந்துக்களை இழிவுபடுத்துவதை வைரமுத்து கைவிடுவதாக இல்லை. இந்து விரோத செயல்களை அவர் தொடர்ந்தார்.


இந்த நிலையில் தமிழாற்றுப்படை என்ற பெயரில் அவர் வெளியிட்ட கட்டுரைகளை தொகுத்து, புத்தகமாக வெளியிட்டு வியாபாரம் செய்ய தொடங்கினார். இந்தப் புத்தகத்தை டிசம்பர் 3-ஆம் தேதி மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் வியாபாரம் செய்வதற்காக திட்டமிட்டு இருந்தார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்துவிட்டார்.





இதற்கிடையே இந்த தகவல், மலேசியாவில் உள்ள இந்துக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் ஆண்டாள் நாச்சியாரை இழிவுபடுத்திய வைரமுத்துவை மலேசிய நாட்டிற்குள் நுழைய விடக்கூடாது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினர்.


மலேசியாவில் உள்ள இந்து தர்ம மாமன்றம் உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து, வைரமுத்துவை மலேசியத் திருநாட்டில் நுழையவிடாமல் துரத்தியடிக்க தீர்மானித்தன. அவர்கள் கோலாலம்பூரில் உள்ள “மலேசியன் இந்தியன் காங்கிரஸ்” அரங்கத்தில் வைரமுத்துவின் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று அதன் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.


“ஆண்டாளை இழிவாக பேசிய வைரமுத்து அதற்காக மன்னிப்பு கேட்டே தீர வேண்டும். அப்படி அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவருக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும். மேலும். ஆண்டாளை, வைரமுத்து இழிவுபடுத்தி பேசியது, ஒட்டுமொத்த இந்துக்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது” என்று மலேசிய இந்துக்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த வாரம் தி.க. தலைவர் கி.வீரமணியை, மலேசிய இந்துக்கள் துரத்தி அடித்தனர்.  அப்போதும் மலேசியாவின் இந்து தர்ம மாமன்றம் உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் ஓரணியில் திரண்டு நின்று அவரை எதிர்த்தன. கி.வீரமணி மலேசியாவில் அனுமதிக்கக்கூடாது என்று மலேசிய அரசாங்கத்திற்கும் கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து கி.வீரமணியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.


அதே போல இப்போதும் மலேசிய இந்து தர்ம மாமன்றமும், இந்து அமைப்புகளும் ஒன்றாக இணைந்து வைரமுத்துவை துரத்தி அடிக்க ஓரணியில் திரண்டு உள்ளன. மலேசிய அரசுக்கும் கோரிக்கை வைத்து உள்ளனர்.


இதனால் வைரமுத்து, மலேசியாவில் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.


சமீப காலமாக தமிழகத்தில் இருந்து செல்லும், இந்து விரோத கும்பல்களுக்கு மலேசிய இந்துக்கள், தக்க பாடம் புகட்டி வருகின்றனர். சுப.வீரபாண்டியன், சீமான், திருமுருகன் காந்தி போன்றோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.


Similar News