முதல்வர் பதவி வேணாம்: நாடளுமன்ற தோல்வியால் விரக்தி அடைந்து புலம்பும் மேற்கு வங்க மம்தா பானர்ஜி!!

முதல்வர் பதவி வேணாம்: நாடளுமன்ற தோல்வியால் விரக்தி அடைந்து புலம்பும் மேற்கு வங்க மம்தா பானர்ஜி!!

Update: 2019-05-25 13:45 GMT


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது. ஆளும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ.க-வின் இந்த மாபெரும் வெற்றி மம்தாவிற்கு இடியாக அமைந்தது.


செய்தியாளர்களிடம் பேசிய மம்தா "பா.ஜ.க-வின் இந்த வெற்றியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜஸ்தான், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க எப்படி இத்தனை இடங்களில் வெற்றி பெற்றது.? ஆனால் எனக்கு பயமில்லை. 6 மாதங்களால் என்னால் பணியாற்ற முடியவில்லை என கட்சியினரிடம் கூறினேன்.


அதிகாரமற்ற முதல்வராக உள்ளேன். கூட்டம் துவங்கியது முதலே, நான் முதல்வராக இனியும் தொடர விரும்பவில்லை என்று தான் கூறினேன். இந்த நாற்காலி எனக்கானது அல்ல. கட்சி சின்னம் எனக்கு மிகவும் முக்கியம்.


மக்கள் துணிவான முடிவு எடுத்தால் என்னால் முதல்வராக தொடர முடியும். எங்களின் ஓட்டு வங்கியை அதிகரிக்க நினைக்கிறோம். இடதுசாரிகள் ஓட்டு தான் பா.ஜ.க-வுக்கு சென்றுள்ளது" என்றார்.


Similar News