நேரடியாக OTT தளத்தில் வெளியாகிறதா 'மாஸ்டர்' ? உண்மை என்ன ?

நேரடியாக OTT தளத்தில் வெளியாகிறதா 'மாஸ்டர்' ? உண்மை என்ன ?

Update: 2020-04-10 05:05 GMT

கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படாமல் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தற்போதைக்கு 'மாஸ்டர்' வெளியாகாது என்றும் அதற்கான காரணத்தைப் பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இதனை அடிப்படையாகக் கொண்டு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 'மாஸ்டர்' படம் வெளியாகத் தாமதமாகும் என்பதால் படத்தினை நேரடியாக OTT தளத்தில் வெளியிடத் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளம் முழுவதும் தகவல் பரவி வருகிறது. தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு எப்படி அதிர்ச்சி ஏற்பட்டதோ அதே அதிர்ச்சி தான் நமக்கும் ஏற்பட்டது.

இதன் உண்மை விவரம் அறிய முற்பட்ட போது சுமார் 220 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் செய்யப்பட்டிருக்கும் 'மாஸ்டர்' நிச்சயம் திரையரங்கில் தான் முதலில் வெளியாகும் என்றும் இதில் பெரும் பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதால் யாருக்கும் நட்டம் ஏற்பட்டுவிடாத வகையில் சூழ்நிலையை ஆராய்ந்து பட வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் இது போன்ற ஆதரமற்ற செய்திகள் எங்கிருந்து வருகிறது என புரியவல்லை என ஆதங்கத்தைப் பதிவு செய்தவர்கள், அனைத்து தடைகளையும் தாண்டி படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெறும் என உறுதியுடன் கூறினர்.  

Similar News