இறைச்சி மற்றும் மீன் விற்பனை கூடங்களை மூட புதுவை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் உத்தரவிட்டுள்ளார்

இறைச்சி மற்றும் மீன் விற்பனை கூடங்களை மூட புதுவை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் உத்தரவிட்டுள்ளார்

Update: 2020-04-11 07:57 GMT

கொரோனா தொற்று புதுச்சேரி மாநிலத்தில் பரவாமல் இருக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் தொகுதியை சுற்றியுள்ள ஆந்திரா பகுதியில் 17பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனால் ஏனாம் தொகுதியின் எல்லைகள் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டு ஆந்திரவில் இருந்து வாகனம் உட்பட யாரும் உள்ளே வராமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


இந்நிலையில் ஏனாம் தொகுதியின்சட்டமன்ற உறுப்பினரும், சுகாதாரத்துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணா ராவ் இன்று தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விற்பனை விலைகள் குறித்து கேட்ட அவர் அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து மீன் விற்பனை செய்யும் பகுதிக்கு சென்ற அமைச்சர் நாளை முதல் மீன் பிடிக்கவும், மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.


ஆய்வின்போது அப்பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தும்படியும், முகக்கவசம் அணியாமலும தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் அறிவுறுத்தினார்.

Similar News