கேட்பாரற்ற பண்ணையில் இருந்து மீட்கப்பட்ட 16-வயது இந்து சிறுமியின் சடலம் - பாகிஸ்தானில் தொடர்ந்து அட்டூழியம்!
Minor Hindu girl abducted and raped in Sindh, body found dumped in a farm
பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாணத்தில், இந்து சமூகத்தைச் சேர்ந்த மைனர் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான இடைவிடாத அட்டூழியங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. பாகிஸ்தானில், சிந்து மாகாணத்தில் உள்ள தாது மாவட்டத்தில் 16 வயது இந்து சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அடையாளம் தெரியாத மூன்று ஆண்களால் கொல்லப்பட்டார். நகீனா சந்தியோ என்ற சிறுமியின் சடலம் மெஹர் நகருக்கு அருகில் உள்ள பண்ணையில் வீசப்பட்டது. சிறுமியின் உடலை கண்டெடுக்கும் முயற்ச்சியின் போது, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, உருவாக்கப்பட்ட அமைப்பான வாய்ஸ் ஆஃப் பாகிஸ்தான், இந்து சிறுமியின் குடும்பம் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. "நீங்கள் பாகிஸ்தானில் ஒரு பெண்ணாக இருந்தால், நீங்கள் பாதுகாப்பாக இல்லை, நீங்கள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால், நீங்கள் நிச்சயமாக பாதுகாப்பாக இல்லை. அதிகாரிகளின் அக்கறையின்மை பிரச்சினையை மோசமாக்குகிறது", என்று அந்த அமைப்பு ட்வீட் செய்தது.
நகீனாவின் தந்தையான ரோஷன் சண்டியோ, தனது மகள் ஜனவரி 19ஆம் தேதி காணாமல் போனதை அடுத்து, மெஹர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போன அன்று வீட்டில் தனியாக இருந்ததாக அவர் கூறினார். சிந்தி புத்திரா அருகே கைவிடப்பட்டபண்ணையில் இருந்து கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டு , மெஹர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது பெற்றோர்கள் அவரது உடலை அடையாளம் கண்டுள்ளனர்.
வழக்கு பதிவு செய்தும் சந்தேக நபர்களை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை என்று அவரது தந்தை கூறினார்.