'மங்கி பி வைரஸ்' என்றால் என்ன.. எப்படி பரவுகிறது தெரியுமா.!

சுவாசித்தலில் சிரமம் ஏற்படும். நரம்பியல் பாதிப்புகள் ஏற்படலாம். ஆய்வகங்களில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் குரங்குகளுக்கு அருகில் இருந்து பணிபுரிவர்களுக்கு இத்தொற்று ஏற்படலாம் என பாஸ்டன் பொது சுகாதார ஆணைய அறிக்கை எச்சரிக்கிறது.

Update: 2021-07-20 03:27 GMT

இரண்டு ஆண்டு கால கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின்னர் சீனாவில் 'இன்னொரு' நோய்த் தொற்றுக்கு கால்நடை மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மங்கி பி வைரஸ் என அழைக்கப்படும் இத்தொற்று, வைரஸால் பாதிக்கப்பட்ட மேக்காக் குரங்குகளின் கடி அல்லது கீறல் மற்றும் இயற்கைக் கழிவுகளின் மூலம் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது மனிதரிடத்தில் பரவுவது அரிதே ஆனாலும் 70 முதல் 80 சதவீதம் இறப்பிற்கு வாய்ப்புள்ளது. எனவே குரங்கினால் கடிக்கப்பட்டால் அது பி வைரஸின் கடத்தியாக இருக்கலாம் என தொடக்க நிலையிலே சிகிச்சை பெற வேண்டும். இத்தொற்றின் அறிகுறி ஒரு மாதத்திற்குள் வெளிப்பட ஆரம்பிக்கும். 

சுவாசித்தலில் சிரமம் ஏற்படும். நரம்பியல் பாதிப்புகள் ஏற்படலாம். ஆய்வகங்களில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் குரங்குகளுக்கு அருகில் இருந்து பணிபுரிவர்களுக்கு இத்தொற்று ஏற்படலாம் என பாஸ்டன் பொது சுகாதார ஆணைய அறிக்கை எச்சரிக்கிறது.

இந்த தொற்றுக்கு ஆன்டிவைரஸ்கள் உள்ளன. ஆனால், தடுப்பூசிகள் இல்லை. 1932ம் ஆண்டு கண்டறியபப்பட்ட இத்தொற்று நேரடித் தொடர்பு மற்றும் உடல் திரவங்களின் வழியே பரவுகிறது. கொரோனா நோய்த்தொற்று அளவிற்கு இதில் பாதிப்புகள் மற்றும் அச்சுறுத்தல் இல்லை என்பதே சாதகமான விஷயம் ஆகும்.

Tags:    

Similar News