பெண் எம்.பி.யை ஆபாசமாக வர்ணித்த முஸ்லிம் எம்.பி! சீறி பாய்ந்த நிர்மலா சீதாராமன், ஸ்மிருதிஇரானி! மன்னிப்பு கேட்க வைத்தனர்!!

பெண் எம்.பி.யை ஆபாசமாக வர்ணித்த முஸ்லிம் எம்.பி! சீறி பாய்ந்த நிர்மலா சீதாராமன், ஸ்மிருதிஇரானி! மன்னிப்பு கேட்க வைத்தனர்!!

Update: 2019-07-29 09:29 GMT


சமாஜ்வாடி கட்சியின் மூத்த முஸ்லிம் தலைவர்களில் ஒருவர் ஆசம்கான். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆனார்.


தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜ.க வேட்பாளரும் நடிகையுமான ஜெயபிரதாவை ஆபாசமாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். இதற்காக ஆசம் கான்  மீது தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுத்து இருந்தது.


இதற்கிடையே ஆசம் கான், சமீபத்தில் பாராளுமன்றத்தில் பா.ஜ.க. பெண் எம்.பி.யை ஆபாசமாக பேசியுள்ளார்.





முத்தலாக் மசோதா தொடர்பான விவாதம் கடந்த 25-ஆம் தேதி நடந்தபோது, முஸ்லிம் எம்.பி. ஆசாம் கானை கருத்து தெரிவிக்கும்படி துணை சபாநாயகரான ரமா தேவி கேட்டுக்கொண்டார். 


அப்போது பேசிய ஆசாம் கான், “உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களின் கண்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தொடர்ந்து உங்களை பார்க்க வேண்டும் என கண்கள் விரும்புகிறது” என்று தொடர்ந்து  வேண்டுமென்றே ஆபாசமாக பேசினார். 





ஆசாம் கானின் இந்த பேச்சிற்கு மத்திய பெண் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 





இதுதொடர்பாக பேசிய ஸ்மிருதி இரானி, “ஆசாம் கானின் பேச்சு ஆண் எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தீராத கறை. அவரது  பேச்சை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டிருந்தது. பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தடுக்க மசோதா நிறைவேற்றப்பட்ட இந்த அவையில், ஆசாம் கான் பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது. அனைவரும் ஒரே குரல் பேசி இது போன்ற விஷயங்களை கண்டிக்க வேண்டும்” என்றார்.




https://youtu.be/0yvGNW3Y-iA



அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கேட்டார். திரிணாமுல் பெண் எம்.பி. மிமி சக்ரபர்த்தி பேசுகையில், “நீங்கள் எடுக்கும் நடவடிக்கையால் பெண் உறுப்பினர்களை யாரும் இதுபோல் பேசகூடாது” என்றார். 


ஆசாம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுள்ளார். 


இதைதொடர்ந்து, இன்று காலை மக்களவை கூடியபோது உறுப்பினர்கள் அனைவரின் மத்தியிலும் முஸ்லிம் எம்.பி. ஆசம் கான் மன்னிப்பு கேட்டார்.


Similar News