மோடி அரசு காரணம் இல்லை எனக் கூறிய முத்தூட் நிதி நிறுவன அதிபர் மீது இடது சாரிகள் மூர்கத்தனமாக தாக்குதல்! கேரளாவில் பரபரப்பு!

மோடி அரசு காரணம் இல்லை எனக் கூறிய முத்தூட் நிதி நிறுவன அதிபர் மீது இடது சாரிகள் மூர்கத்தனமாக தாக்குதல்! கேரளாவில் பரபரப்பு!

Update: 2020-01-08 12:00 GMT

மோடி அரசு காரணம் இல்லை எனக் கூறிய முத்தூட் நிதி நிறுவன அதிபர் மீது இடது சாரிகள் மூர்கத்தனமாக தாக்குதல்! கேரளாவில் பரபரப்பு.


கேரளாவில் உள்ள தங்கள் அனைத்து நிறுவன கிளைகளையும் முத்தூட் நிறுவனம் மூடி வந்தது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான ஜார்ஜ் அலெக்சாண்டர் இடதுசாரிகளின் தொழிற்சங்க அமைப்பான சி ஐ டி யு குண்டர்களால் நேற்று கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்தியா முழுவதும் பல கிளைகளை சுமூகமான முறையில் நடத்தி வந்தாலும் கேரளாவில் உள்ள நூற்றுக் கணக்கான கிளைகளில் தொழிலாளர்கள் மூலம் பல  பிரச்சனைகளை கேரள இடதுசாரிகளின் தொழிற்சங்கமான சி ஐ டி யு சங்கம் பினராயி விஜயன் அரசின் உதவியுடன் தூண்டி வந்தது இதனால் ஏற்பட்ட பல தொழில் தொல்லைகளை அடுத்து இந்த  நிறுவனம் கேரள கிளைகளை மூட முடிவெடுத்து மூடத்தொடங்கியதாக செய்திகள் வந்தன.





ஆனால் இதற்கு காரணம் மோடி அரசுதான் என அங்குள்ள இடதுசாரிகள் அரசும் சி ஐ டி யு சங்கத்தினரும் புரளி கிளப்பினர். ஆனால் முத்தூட் நிறுவன அதிபர் ஜியார்ஜ் அலெக்சாண்டர் மோடி அரசு காரணம் இல்லை என்றும் இடதுசாரி தொழிலாளர் சங்க அமைப்பான சி ஐ டி யுவின் அராஜக செயல்கள் மற்றும் அட்டூழியங்களால்தான் கேரளாவில் உள்ள கிளைகளை மூடியதாக அவர் கூறியிருந்தார்.  


அவருடைய இந்த பேட்டி இந்தியா முழுவதும் தொழில் துறையினரிடையே சல சலப்பை ஏற்படுத்தியது. இதனால் இடதுசாரிகள் ஆத்திரம் அடைந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக  சி ஐ டி யுவின் குண்டர்கள் தங்கள் கொச்சி தலைமை அலுவலகத்தில் புகுந்து ஊழியர்களை தாக்குவதாகவும், அராஜக செயல்களில் ஈடுபடுவதாகவும் போலீசில் புகார் அளித்தும் பயனில்லாத நிலையில் நீதிமன்றத்தில் இந்த நிறுவனம் மனு அளித்திருந்தது. நீதிமன்றம் நிறுவனத்துக்கும், ஊழியர்களுக்கும், நிறுவன அதிபர் ஜியார்ஜ் அலெக்சாண்டருக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என போலீசாருக்கு  உத்தரவிட்டிருந்தது. போலீசாரும் பலத்த பாதுகாப்பை நிறுவனத்தை சுற்றிலும் அமைத்திருந்தார்கள்.


இந்த நிலையில் ஜியார்ஜ் அலெக்சாண்டர் நேற்று காலை ( 06.01.2020 ) தனது கொச்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று கொண்டிருக்கையில் சிஐடியு குண்டர்கள் அவரது காரை நோக்கி சரமாரியாக கல்வீச்சு நடத்தினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்து அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் முத்தூட் நிறுவன ஊழியர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான புகாரையும் national stock exchange of india ltd மற்றும் depaartment of corporate services கும் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பினராயி விஜயனுக்கு எதிராக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Similar News