ஸ்ரீராமனை இழிவாக பேசிய நாகை.திருவள்ளுவனை, தெருநாயைப் போல அடித்து இழுத்துச் சென்றனர்!

ஸ்ரீராமனை இழிவாக பேசிய நாகை.திருவள்ளுவனை, தெருநாயைப் போல அடித்து இழுத்துச் சென்றனர்!

Update: 2019-12-05 06:36 GMT

தமிழ் புலிகள் என்ற கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன். இவர் திருமாவளவனை போன்று இந்து தெய்வங்களை இழிவாக பேசி வருகிறார். குறிப்பாக முஸ்லிம்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, இந்து தெய்வங்களை மிக கேவலமாக பேசி வருகிறார். அதை அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த முஸ்லிம்கள் கண்டிக்காமல் ரசிக்கின்றனர். இது கவலைப்பட வேண்டிய ஒன்று.


சமீபத்தில் நடந்த முஸ்லிம்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாகை.திருவள்ளுவன், இந்துக்கள் வணங்கும் ஸ்ரீராமனை மிகக் கேவலமாக வர்ணித்தார். “அணிலை தடவியதால் அதற்கு மூன்று கோடு போட்ட ராமன், சீதையை தடவை இல்லையா? அவர் மீது ஏன் கோடுகள் விழவில்லை?” என்று தரம் தாழ்ந்து விமர்ச்சித்து, இந்துக்கள் மனதை வேண்டுமென்றே திட்டமிட்டு புண்படுத்தினார்.





 திருமாவளவன், இந்து தெய்வங்களை எல்லாம் கீழ்த்தரமாக விமர்சித்து இந்துக்கள் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தினர். அந்த காயம் ஆறுமுன்பே, நாகை.திருவள்ளுவனும், இந்துக்கள் இதயத்தில் வேல்கொண்டு குத்தி உள்ளார்.


ஸ்ரீராமனை இழிவாக பேசியதன் மூலம் இந்துக்களுக்கு ஏற்பட்ட ரணம் ஆறுவதற்கு முன்னதாகவே, நாகை.திருவள்ளுவன் உடம்பெல்லாம்  கோடு போட்டனர் போலீஸ்காரர்கள்.





கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானார்கள். இதை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணியில் இடம்பெற்ற அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் பிண அரசியலை அரங்கேற்றினர்.


திருமாவளவன் கட்சியினர் மற்றும் நாகை.திருவள்ளுவன் ஆதரவாளர்கள், காயமடைந்தவர்களை அனுமதித்து இருந்த ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, மைக்கில் பேசி போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே வெளியூர்க்காரர்கள். இவர்கள் யாரும் மீட்புப் பணியில் ஈடுபடவும் காயம்பட்டவர்களுக்கு அல்லது உறவினர்களை இழந்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்குகூட செல்லவில்லை. ஆனால் அதை வைத்து பிண அரசியல் நடத்துவதற்காக, நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கு இடையூறாக இந்த போராட்டத்தை நடத்தினார்கள்.


அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் பலமுறை எச்சரித்தும் அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தடியடி பிரயோகம் செய்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதில் மிகவும் துள்ளிக் குதித்த நபர் நாகை.திருவள்ளுவன். அவரை தெருநாயை அடிப்பதுபோல் அடித்து இழுத்துச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.


ஸ்ரீராமன், சீதையின் உடலில் ஏன் கோடு போட வில்லை என்று இழிவாக பேசிய நாகை.திருவள்ளுவரின் உடம்பெல்லாம் கோடுகள் விழும் வண்ணம் போலீசார் தர்ம அடி கொடுத்தனர்.


"அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்" என்பது பழயமொழி. ஆனால் இப்போதெல்லாம் உடனுக்குடன் தண்டனை கிடைத்து விடுகிறது.


Similar News