டெல்லி: சீன மோதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் பெயர்களை தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கத் திட்டம்.!

வீர மரணமடைந்த 20 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்கள், டெல்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும்.

Update: 2020-07-30 12:20 GMT

ஜூன் 15 ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையினருடன் போராடி வீர மரணமடைந்த 20 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்கள், டெல்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என்று அதிகாரிகள் இன்று (ஜூலை 30) தெரிவித்தனர்.

நினைவுச்சின்னத்தில் இராணுவ வீரர்களின் பெயர்களை பொறிப்பதற்கான செயல்முறை நடந்து முடிக்க சில மாதங்கள் ஆகலாம் என்று அவர்கள் உத்தேசித்தனர்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் முதல் முறையாக சீன மற்றும் இந்தியப் படைகள் ஜூன் 15 இரவு பல மணி நேரம் கால்வான் பள்ளத்தாக்கில் மோதிக் கொண்டன.

இந்த மோதலில் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களில் 16 பீகார் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான கர்னல் B சந்தோஷ் பாபுவும் தமிழ்நாட்டை சேர்ந்த ஹவில்தார் பழனியும் அடங்குவர்.

இந்த சம்பவம் கிழக்கு லடாக்கில் எல்லை பதட்டத்தை கணிசமாக அதிகரித்தது, இந்தியா அதை "சீனாவின் திட்டமிட்ட நடவடிக்கை" என்று அழைத்தது.

இந்திய வீரர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களை நடத்திய சீன வீரர்கள் கற்கள், ஆணி பதித்த குச்சிகள், இரும்பு கம்பிகள் மற்றும் கிளப்புகளைப் பயன்படுத்தினர்.

சீனா தனது படையினரில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என வெளிப்படுத்தவில்லை. ஒரு அமெரிக்க உளவுத்துறை அறிக்கையின்படி, சீன தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆகும்.

ஜூலை 17 ம் தேதி கிழக்கு லடாக்கிற்கு விஜயம் செய்தபோது, ​​பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகார் படைப்பிரிவின்வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள் எல்லையை பாதுகாப்பதில் முன்மாதிரியான தைரியத்தை காட்டியது மட்டுமல்லாமல் 130 கோடி இந்தியர்களின் பெருமையையும் பாதுகாத்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில் கூறினார்.

கடந்த மாதம், கால்வான் பள்ளத்தாக்கு மோதலின் போது சீனப் படைகளை கையாண்ட துணிச்சலுக்காகவும், மே மாதம் பாங்காங் த்சோவில் அவர்களை எதிர்கொண்டதற்காகவும் ஐந்து வீரர்களுக்கு இராணுவத் தலைவர் ஜெனரல் எம். நாரவனே 'பாராட்டு அட்டைகள்' வழங்கினார். 

Source: https://www.news18.com/amp/news/india/names-of-soldiers-killed-in-clash-with-china-at-galwan-valley-to-be-inscribed-on-national-war-memorial-2744423.html?__twitter_impression=true

Similar News