இந்தியாவிற்கு எதிராக திரும்பிய கத்துக்குட்டி - இன்று மாலைக்குள் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்படுகிறாரா நேபாள பிரதமர்? ஆளும் கட்சியில் திடீர் பிளவு!

இந்தியாவிற்கு எதிராக திரும்பிய கத்துக்குட்டி - இன்று மாலைக்குள் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்படுகிறாரா நேபாள பிரதமர்? ஆளும் கட்சியில் திடீர் பிளவு!

Update: 2020-07-04 08:15 GMT

இந்தியாவுடனான பிரச்சனையால் நேபாள பிரதமருக்கு ஆளும் கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. இதன் காரணமாக  இன்று மாலை ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்ட நேபாள பிரதமர், இந்திய பகுதிகளை தமது நாட்டுடன் இணைத்து வரைபடம் வெளியிட்டார். இந்தியாவின் 5 மாநிலங்களுடன் 1,850 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொள்ளும் நேபாளம், அத்தியாவசிய தேவையில் தொடங்கி, பணப்புழக்கம் வரைக்கும் இந்தியாவை சார்ந்தே உள்ளது.

நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 32,000 கோர்கா வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். அப்படி இருக்கும் போது, நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி இந்தியாவிற்கு எதிராக திசை திரும்பியது அந்நாட்டு மக்கள் உட்பட, அரசியல்வாதிகள் வரைக்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நேபாளத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது எனவும், சொந்த கட்சிக்குள் பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு எதிராக குரல் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்தியாவுக்கு எதிரான சமீபத்திய கருத்துக்கள் அரசியல் ரீதியாக சரியானவை அல்ல, இராஜதந்திர ரீதியில் பொருத்தமானவை அல்ல என்று ஆளும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உணர்ந்ததால், ஜூன் 30 அன்று உயர் என்சிபி தலைவர்கள் பிரதமர் ஒலியை பதவி விலக வேண்டும் என்று கோரினர்.

இதற்கிடையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது, அங்கு கே.பி. ஓலியின் தலைவிதி தீர்மானிக்கப்படும்.

ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் (என்சிபி) வளர்ந்து வரும் விரிசல்களுக்கு மத்தியில், நேபாள பிரதமர் கே.பி. ஓலி சனிக்கிழமை இன்று ராஜினாமாசெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

Similar News