மத்திய அரசு பரிந்துரை தமிழகத்தில் 6 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்!!

மத்திய அரசு பரிந்துரை தமிழகத்தில் 6 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்!!

Update: 2019-09-30 05:24 GMT


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகம், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் புதிதாக 31 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க சிபாரிசு செய்துள்ளது.  மோடி அரசின் சிபாரிசை அடுத்து தொழில்நுட்ப திட்ட மதிப்பீட்டு குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்ற செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி புதுடெல்லி நிர்மான் பவனில் உள்ள பொது சுகாதார துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.  


அப்போது மோடி அரசால் சிபாரிசு செய்யப்பட்டதன் அடிப்படையில் தமிழகம், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் புதிதாக 31 மருத்துவக் க ல்லூரிகளை கல்லூரிகளை அமைப்பதற்கான திட்டங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டது.  மேற்படி கல்லூரிகளை அமைப்பதற்கான தொழில் நுட்ப திட்ட மதிப்பீடுகள் தயாரிப்பதற்கான ஆலோசனையும் செய்யப்பட்டது.


இதன்படி தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள Phase-3 மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளுடன் இணைத்து புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான தொழில் நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதை அடுத்து மேற்கண்ட 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைவது உறுதி செய்யப்பட்டு வருகிறது.


மேலும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள உதம்பூர், ஹந்துவாரா மாவட்டங்களில் தலா -1, ராஜஸ்தான் மாநிலத்ததில்  - 10, உத்தரபிரதேச மாநிலத்தில்  - 3, மத்திய பிரதேசத்தில்  - 10 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கான தொழில் நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.   


Similar News