'சாஹோ' படத்தின் புதிய புரமோஷன் அப்டேட்!!

'சாஹோ' படத்தின் புதிய புரமோஷன் அப்டேட்!!;

Update: 2019-08-23 11:30 GMT

பிரபல நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போது படத்தின் புரமோஷன் செய்வது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களை புரமோஷனுக்கு முக்கியத்துவம் அதிகமாக உள்ளது.


அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதல்முறையாக விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு டுவிட்டரில் ஒரு எமோஜி பெறப்பட்டு புரமோஷன் செய்யப்பட்டது. அதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே' ஆகிய திரைப்படங்களுக்கும் டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டது


அதை போலவே பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படத்திற்கும் தற்போது டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டுள்ளது. டுவிட்டர் எமோஜியை பெறும் முதல் தெலுங்கு படம் 'சாஹோ' என்பது குறிப்பிடத்தக்கது


ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகும்.


Similar News