கன்னியாகுமரி மாவட்ட விளங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான விஜயதாரணி பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் இதனை மறுத்து காங்கிரஸில் தான் விஜயதாரணி இருக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் மத்திய இணைய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி இன்று பாஜகவில் இணைந்துள்ளார் என்று அதிகாரப்பூர் தகவலை பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் பாஜகவில் இணைந்த பிறகு விஜயதாரணி செய்தியாளர்களை சந்தித்து, இந்திய தேசம் பிரதமர் மோடி தலைமையில் சர்வதேச அளவில் பல சாதனைகளை புரிந்து வருகிறது அவரது தலைமையில் அரசியல் பணியாற்ற பாஜகவில் இணைந்துள்ளேன் என்று கூறினார்.
மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரி விஜயதாரணி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, டெல்லியில், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு முருகன் மற்றும் தமிழக பாஜக மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் திரு அரவிந்த் மேனன் மாநில இணை பொறுப்பாளர் திரு பொங்குலோட்டி சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
சகோதரி விஜயதாரணி அவர்களை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Source : The Hindu Tamil thisai