துர்கா ஸ்டாலினின் சகோதரருக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. யார் அந்த ராஜமூர்த்தி?
தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் தற்போது மாற்றப்பட்டு உள்ளார். குறிப்பாக தமிழ்நாடு அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனராக டாக்டர்.ராஜமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வேறு யாரும் இல்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவியின் சகோதரர் ஆவார்.
தற்போது டாக்டர்.ஜே.ராஜமூர்த்தியை மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநராக நியமித்துள்ள நிலையில், தமிழகத்தில் திமுக அரசு மீண்டும் சொந்த பந்தத்தை ஊக்குவித்து வருகிறது என்ற கருத்தும் நெட்டிசன்கள் மத்தியில் தற்போது வலுவாக எழுந்து இருக்கிறது. ராஜமூர்த்தி இதற்கு முன்பே தமிழக அரசு மருத்துவமனையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். இவர் தமிழக இ.எஸ்.ஐ மருத்துவமனைகளின் கூடுதல் இயக்குனராக இருந்து வந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதலுடன் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
ராஜமூர்த்திக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளின் பொறுப்பும் இருக்கும். மேலும் இவர் ஏற்கனவே வகித்து வந்த டி.எம்.எஸ், இ.எஸ்.ஐ மருத்துவமனைகள் பொறுப்பு தற்போது டாக்டர்.இளங்கோவனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Input & Image courtesy: The Commune News