பழங்குடியின மக்களுக்காக மோடி அரசின் சிறப்பான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்...!

Update: 2024-07-19 18:08 GMT

பழங்குடியின பகுதிகளில் வசிக்கும் மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என மத்திய அரசு உறுதி பூண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசு பழங்குடியின மக்களுக்காகவே பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 220 மாவட்டங்களில் உள்ள 22,544 கிராமங்களில் 75 குழுக்களைச் சேர்ந்த சுமார் 28 லட்சம் பழங்குடியின மக்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள பழங்குடியின மக்களுக்காகவே பிரதமர் மோடி அரசு ஜன் மன் யோஜனா திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டம் பின்தங்கிய பழங்குடியினரின் கிராமங்களுக்கு வீடுகள், மின்சாரம், தண்ணீர், கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாடு போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது. இதில் சுமார் 24000 கோடி ரூபாயை மோடி அரசு ஒதுக்கியது. 

மேலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசால் தொடங்கப்பட்ட பழங்குடியின சமூகத்திற்கான தனி அமைச்சகத்தின் நிதியை ஆறு மடங்கு பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார். இந்த நிதி நேரடியாக பழங்குடியினர் நலனுக்காக ஒதுக்கிடப்பட்டுள்ளது. 

பழங்குடியினருக்காகவே தொடங்கப்பட்ட பிரதமரின் ஜன்மன் திட்டத்தில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்காக பல நலத்திட்டங்களின் பட்ஜெட்டை ஐந்து மடங்கு உயர்த்தினார். மேலும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி பழங்குடியினருக்காகவே 500க்கும் மேற்பட்ட ஏக்கலைவ மாதிரி பள்ளிகளை மோடி அரசு தொடங்கியுள்ளது. 

அதோடு நாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் கலாச்சாரங்களையும், பெருமைகளையும் தேசிய அளவில் காட்சிப்படுத்தும் வகையில் பல பிரம்மாண்ட கண்காட்சிகளையும் பிரதமர் மோடி நடத்தியுள்ளார். 

ஆஹர் அனுதன் யோஜனா திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பெண் பயனாளிகளுக்கு மாதாந்திர தவணைகளை பெறுகின்றனர். மேலும் இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு குறிப்பாக பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு சத்தான உணவுக்காக மாதம் ரூ.1,500 வழங்கப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர்களுக்காகவே 170 கோடி செலவில் பல்கலைக்கழகத்தை உருவாக்கியுள்ளார் பிரதமர் மோடி. 

அதே வகையில் நம் நாட்டின் குடியரசு தலைவராக தற்போது பழங்குடியின பெண் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி தேர்ந்தெடுத்துள்ளார் மற்றும் பழங்குடியின மக்களின் தலைவரான பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் தற்போது கோலாகலமாக கொண்டாட வழிவகை செய்துள்ளார். 

Tags:    

Similar News