குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க புதிய ஆன்லைன் போட்டலை அறிமுகப்படுத்திய மத்திய அரசு

Update: 2024-11-28 16:53 GMT

இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதற்கான புதிய ஆன்லைன் போர்டல் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்

அதாவது குழந்தை மற்றும் இளம்பருவத் தொழிலாளர்(தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை)சட்டம் 1986 இன் விதிகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக குழந்தைத் தொழிலாளர் இல்லாதோருக்கான திறம்பட அமலாக்கத்திற்கான தளம்(PENCiL)என்ற ஆன்லைன் போர்டல் மத்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது இந்த போர்ட்டலில் மத்திய அரசு மாநில அரசு மாவட்ட திட்ட சங்கங்கள் குழந்தைகள் கண்காணிப்பு அமைப்பு மற்றும் புகார் மூலை ஆகிய ஐந்து கூறுகள் உள்ளன

மேலும் இச்சட்டத்தின் விதிகளை கண்டிப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, மாவட்ட நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும்

கூடுதலாக புலம்பெயர்ந்தோர் பெண் குழந்தைகள் மற்றும் எஸ்சி எஸ்டி குழந்தைகள் உட்பட குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்காக அந்தந்த மாநில அரசுகள் எடுக்க வேண்டிய செயல் புள்ளிகளைக் கணக்கிடும் மாதிரி மாநில செயல் திட்டத்தை அமைச்சகம் உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார் மத்திய இணையமைச்சர்

Tags:    

Similar News